யோபுவின் கதை – அதிகாரம் 26

பில்தாதுக்கு யோபுவின் பதில்…………..

பில்தாத்! நீ பலமில்லாதவனுக்கு உதவவில்லை. தளர்ந்துபோனவர்களைக் காப்பாற்றவில்லை. விவேகமற்ற ஒருவனுக்கு நீ அறிவுரை கூறவில்லை. ஆழமான நுண்ணறிவை நீ வெளிப்படுத்தவில்லை. என்னிடம் நீ சொன்னவற்றையெல்லாம் கூற உனக்கு யார் உதவினார்கள்? எவருடைய ஆவி உன் மூலம் பேசுகிறது?

இறந்தவர்களின் ஆவி பூமிக்கடியில் உள்ள நீரில் தத்தளிக்கும். இறந்தவர்களின் உலகம் தேவனுக்குத் திறந்தவெளி. எவற்றாலும் அவர் பார்வையிலிருந்து அதை மூடி மறைக்க முடியாது.  அவர் வானத்தின் வடக்குப்பகுதியை வெறுமையாக்கி அங்கே பூமியைச் சுற்றவைக்கிறார். அவர் மேகங்களில் நீரை நிரப்பி அவை நீரின் கனத்தால் வெடிக்காமல் இருக்க வைக்கிறார்.  முழு நிலவை மேகத்தின் பின் மறைக்கிறார்.  கடல் பரப்பில் ஒரு வட்டம் வரைந்து இருளுக்கும் ஒளிக்கும் எல்லை வகுக்கிறார்.

அவரது கோபத்தில் வானத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் அதிர்கின்றன. தன் வலிமையால் கொந்தளிக்கும் கடலை அவர் வெற்றி கொண்டு, ஞானத்தால் அதன் மூர்க்கத்தை ஒடுக்குகிறார். தன் மூச்சினால் வானத்தைத் தூய்மையாக்கி நெளிகின்ற பெரிய கடல் பாம்பைத்  தன்  கைகளால் காயப்படுத்துகின்றார். ஆனால் இவையெல்லாம் அவரது ஆற்றலின் ஒரு சிறு துளி. நாம் கேட்பதெல்லாம் அவர் ஆற்றலின் ஒரு  சிறு முனகல். அவரது முழு வல்லமையை யார்தான் அறிவார்?

தொடரும்…………..

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s