யோபுவின் கதை – அதிகாரம் 24

யோபுவின் பதில் தொடர்கிறது…

தன் நீதிமன்றத்தை எப்போது திறக்கப் போகிறார் என்பதை தேவன் இன்னும் முடிவு செய்யவில்லை. அது ஏனென்று தெரியவில்லை. கெட்ட மனிதர் தமது நிலங்களை விரிவு படுத்த வயல்களைப் பிரிக்கும் எல்லைக் கற்களை மாற்றிவைத்தும், மற்றவர்களின் ஆடுகளைத் திருடியும் அனுபவிக்கிறார்கள். அவர்கள் அனாதைகளின் கழுதைகளை அபகரிக்கிறார்கள். விதவைகளின் மாடுகளை ஓட்டிக்கொண்டுபோய் அவர்களிடம் பணம் பறிக்கிறார்கள். ஏழைகளை உதாசீனம் செய்து அவர்களை ஓடி ஒளியச்செய்கிறார்கள் பாருங்கள். அந்த ஏழைகள் காட்டுக்கழுதைகளைப் போல் அதிகாலையிலேயே உணவு தேடப் புறப்படுகிறார்கள். காட்டுவெளிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்குமான உணவைக் கொடுக்கவேண்டும். இந்த ஏழைகள் கெட்டவர்களின் நிலத்தில் பாடுபட்டு அவர்களுக்காகப் பழங்களைப் பறிக்கிறார்கள். குளிரிலே தம்மைக் காத்துக்கொள்ள அவர்களுக்கு உடையில்லை. மலையிலிருந்து பொழியும் மழையில் நனைந்து பாறைகளில் ஒதுங்குகிறார்கள்.கெட்ட மனிதர் தாய் தந்தையற்ற குழந்தைகளை அடிமையாக்குகிறார்கள். ஏழைகள் பட்ட கடனுக்காக அவர்களின் குழந்தைகளை சொந்தமாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் ஆடையின்றியும் உணவின்றியும் தவிக்க விடப் படுகிறார்கள். ஆலிவ் எண்ணையும், திராட்சையிலிருந்து மதுவும் ஏழைகள் தயாரித்தாலும் தங்களின் தாகத்தை அவர்கள் தீ ர்த்துக்கொள்ளமுடிவதில்லை.

நகரத்தில் மனிதர்கள் தவிக்கிறார்கள். குற்றுயிராய்க்கிடப்பவர்களின் ஆன்மா கிடந்து துடிக்கிறது. ஆனால் கடவுள் அவர்கள் பிரார்த்தனையைக் கண்டுகொள்வதில்லை. கெட்டவர்கள் ஒளியை விரும்புவதில்லை. ஒளி காட்டும் வழியை அறியாததால் அது காட்டும் பாதையில் அவர்கள் செல்வதில்லை. பொழுது விடியும்போது எழுந்து ஏழைகளைக் கொல்கிறான் கொலைபாதகன். இரவிலே திருடனைப்போல் அவன் திரிகிறான். மாற்றான் மனைவியை நாடுகிறவன் இருள் வருவதற்காகக் காத்திருக்கிறான். யாரும் தன்னைப் பார்க்கவில்லை, தான் யார் என்று அறியமாட்டார் என அவன் நினைத்துக் கொள்கிறான்.

கெட்டவர்கள், பகலிலே குறித்துவைத்த வீடுகளில் இருட்டியபின் திருடப்போகிறார்கள். அவர்கள் வெளிச்சத்தை அறியார். காலைப் பொழுதின் வெளிச்சம் அவர்களுக்கு மரண இருளாய் இருக்கிறது. அந்த இருளின் பயங்கரம் அவர்களுக்கு மிகவும் பரிச்சயம். வெள்ளம் கெட்டவர்களை மூழ்கடிக்கும். அவரது நிலங்களில் கடவுளின் சாபம் படிந்ததால் அங்குள்ள திராட்சைத் தோட்டங்களில் திராட்சைகொடிகள் வளராது. சூரியனைக் கண்ட பனி விலகுவதுபோல் கெடுதல் செய்பவர்கள் விரைவில் இறந்து போகிறார்கள். பெற்ற தாய் அவனை மறப்பாள். அவனது உடம்பைப் புழுக்கள் புசிக்கும். அவனை யாரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் வீழ்ந்த மரம் போல் ஆவார்கள். மலடிகளின் சொத்துக்களை அபகரித்துகொண்டதாலும்,விதவைகளுக்கு ஒரு நன்மையையும் செய்யாததாலுமே அவர்களுக்கு இவையெல்லாம் நேர்ந்தன.

தேவன் வல்லமை மிக்கவர். அவர் செல்வந்தர்களையும், பலம் பொருந்தியவர்களையும்,செல்வாக்கு மிக்கவர்களையும் அழித்துவிடுவார். தாம் எப்போது சாவோம் என்று அவர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணுவார்கள். தேவன் அவர்களை அப்படி நினைக்கச்செய்வான். ஆனால் தேவனின் கண்காணிப்பில் அவர்கள் என்றும் இருப்பார்கள். அவர்களின் செயல்களை அவர் அறிவார். சிறிது காலம் அவர்கள் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள்.ஆனால் அவர்களின் நிலை தலைகீழாக மாறும். மற்ற எல்லோரைப்போலவும் அடக்கப்பட்டு மண்ணில் முளைத்திருக்கும் களைகளைப்போல் அவர்கள் சாவார்கள். எனது இந்த வார்த்தைகளை யாராவது மறுக்க முடியுமா? அல்லது அவை உண்மையில்லை என்று நிரூபிக்கமுடியுமா?

தொடரும்……………

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s