யோபுவின் கதை – அதிகாரம் 23

யோபுவின் பதில்………

தேவன் எனக்கு இழைக்கும் பெரும் துன்பங்களினால் இன்றளவும் அவர் மீது எனக்குக் கோபம்தான். அவர் இருக்கும் இடத்துக்கு நான் செல்ல விரும்புகிறேன். அங்கு அவரைச்சந்தித்து என் பக்கத்து நியாயங்களை அவருக்கு விளக்குவேன். என் விளக்கங்களுக்கு அவர் கூறும் பதில்களைக்கேட்டு அவற்றைப் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அவர் தன மகத்தான வல்லமையுடன் என்னுடன் வழக்காடுவாரா? அல்ல. அவர் என்மீது நிச்சயம் கருணை கொள்வார். நான் நேர்மையானவன். என் மாசற்ற தன்மையை அவரிடம் நிரூபணம் செய்து என்றென்றைக்கும் நான் தப்பித்துக்கொள்வேன்.

இதோபார்! எத்திசையில் போனாலும் அவரை என்னால் காணமுடியவில்லை. ஆனால் நான் செல்லும் வழிகளை அவர் அறிந்துள்ளார். அவ்வழிகளை அவர் சோதித்து நான் நல்லவன் என்ற முடிவுக்கு வருவார். அப்பொழுது நான் புடம் போட்ட தங்கமாய் ஒளிர்வேன். நான் என்றென்றும் அவர் காட்டிய வழியில்தான் நடந்துள்ளேன். அவர் வகுத்த நெறிகளிலிருந்து நான் சிறிதளவும் தவறி நடக்கவில்லை. அவர் உதடுகளிலிருந்து வெளிப்பட்ட கட்டளைகளை மீறி நான் செயல்பட்டதில்லை. அவரது வார்த்தைகளை எனக்கு அன்றாடம் உயிர் கொடுக்கும் உணவைக்காட்டிலும் உயர்வாக மதிக்கிறேன். அவர் மனம் மாறவே இல்லை. அவர் மனதை யார் மாற்றமுடியும்? அவர் என்னை என்ன செய்ய நினைத்திருக்கிறாரோ அதை செய்தே தீருவார். எனக்கு செய்வதற்கு அவரிடம் நிறையவே உண்டு. ஆகையால் அவர் முன்பாக நான் கலங்குகிறேன். அவரைப்பற்றி நினைக்கையிலேயே என்னைப் பயம் கவ்வுகிறது. அவர் என் மனதை இளகச்செய்து பயத்தை ஊட்டுகிறார். இருட்டு என்னைக் குருடாக்கினாலும் நான் அஞ்சுவது இறைவனுக்குத்தான். இருளுக்கல்ல.

தொடரும்……………

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s