யோபுவின் கதை – அதிகாரம் 22

யோபுவுக்கு எலிபாசுவின் பதில்……..

மனிதனின் செயல்கள் எவற்றாலும் தேவனுக்கு ஒரு பயனுமில்லை. விவேகமுள்ள ஒரே ஒரு மனிதனால் கூட தேவனுக்கு மகிழ்ச்சி தரமுடியாது. நீ குற்றமற்ற வாழ்க்கை நடத்தினால் தேவனுக்கு என்ன நன்மை? உனது வாழ்க்கைப் பாதைகள் தூய்மையாய் இருந்தால் தேவனுக்கு அதனால் என்ன பயன்? தேவன் உனக்குப் பயந்து உன்னுடன் வழக்காடி உனக்கு நியாயம் வழங்குவார் என நினைக்கிறாயா? இல்லை. நீ கெட்டவன்.உனது கெட்ட செயல்கள் முடிவில்லாதவை. உனது சகோதரனுக்குக் கடன் கொடுத்தாய். அந்தக் கடனை அவன் திருப்பித் தரவேண்டுமென்பதற்காக அவனது ஆடைகளை அடமானம் எடுத்துக் கொண்டாய். தாகமென்று வந்தவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. பசியென்று கேட்டவனுக்கு உணவு தரவில்லை. யோபு நீ செல்வாக்கு மிக்கவன். உனக்கு நிலபுலன்கள் அதிகம். அவற்றின் பயனை நீயே அனுபவித்தாய். விதவைகளுக்கு நீ உதவவில்லை. அனாதைக் குழந்தைகளைக் கொடூரமாக நடத்தினாய். இவற்றால்தான் உனக்கு இவ்வளவு துயரமும் துன்பமும். எனவேதான் பயத்தால் கலங்குகிறாய். கும்மிருட்டாகிவிட்டது உன்னால் பார்க்கமுடியாது. ஆழமான நீர் உன்னை மூழ்கவைக்கிறது. எட்டாத உயரத்தில் உள்ள நட்சத்திரக்கூட்டங்களுக்கும் மேலே இறைவன் சொர்க்கத்தில் இருப்பதால் அவர் இங்கு நடப்பதை அறியமாட்டார் என்று சொல்கிறாய். கனத்த மேகங்கள் அவரை மறைத்துவிடுகின்றன என்றும் வான் வெளியின் வட்டத்தில் அவர் உலவுகிறார் என்றும் சொல்கிறாய்.

தவறான வழியில் வாழ்வதை நிறுத்து. அப்படி வாழ்வதைக் கெட்டவர்கள் நீண்ட காலமாக செய்து வருகின்றனர். அவர்களது வாழ்வின் அடித்தளத்தில் வெள்ளம் பாய்ந்து அவர்கள் காலம் வருமுன்னே இளமையில் இறந்து போனார்கள். அவர்கள் இறைவனை நம்பவில்லை. இறைவனால் தமக்கு எந்தப் பயனும் இல்லை என்று நினைத்தார்கள். ஆனால் இறைவனோ அவர்களுக்கு இப்பூமியில் நல்லன எல்லாம் கொடுத்து மகிழ்ச்சியடையச்செய்தார். அப்படியிருந்தும் அவரை நம்பாத கெட்டவர்களின் எண்ணத்தை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. எப்படியும் இறைவன் அவர்களைத் தண்டிப்பான். நல்லவர்கள் அதைப் பார்த்து திருப்தி அடைவார்கள். தமது எதிரிகளை இறைவன் அழித்துவிட்டார் என நிம்மதி அடைவார்கள். அழிந்தவர்களின் உடைமைகளையெல்லாம் தீ விழுங்கும்.

ஆகவே, யோபு! இறைவனோடு வாதாடாதே. அவரைப் பணிந்து போற்று. அதனால் உனது துன்பமெல்லாம் நீங்கி மீண்டும் வளம் பெறுவாய். அவர் சொல்வதைக் கவனமாகக்கேள். கேட்டு அவற்றை நினைவில் நிறுத்து. இறைவன் விரும்பும் பாதையில் உன் வாழ்க்கையை அமைத்துக்கொள். கெட்டவற்றை மற. அதனால் உனது வாழ்வு சுகமாயிருக்கும். உன்னிடமுள்ள பொன்னால் உனக்கு மகிழ்ச்சி உண்டாகாது. ஓபிர் பகுதியிலிருந்து நீ பெற்ற பொன்னையெல்லாம் வறண்ட பள்ளத்தாக்கில் எறிந்துவிடு. பின்னர் நீ உணர்வாய், இறைவன் பொன் மற்றும் வெள்ளியைக்காட்டிலும் மதிப்பு வாய்ந்தவன் என்று. இறைவனை உணர்வது இன்பம். இறைவனை வணங்க இன்பம் பெருகும். உன் பிரார்த்தனையை அவர் செவி மடுப்பார். அவருக்கு நீ கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றுவாய். நீ செய்ய விரும்பும் காரியங்கள் தடையின்றி நடக்கும். உனது பாதை ஒளி மயமாயிருக்கும். துன்பத்தில் வாழ்கின்ற மக்களுக்காக நீ பிரார்த்தனை செய்வாய். அதை ஏற்று இறைவன் அவர்கள் துயர் துடைப்பார். நீ நல்லதொரு வாழ்க்கையை வாழ்வதால் தவறிழைத்தவர்களைக் கூட அவர் மன்னிப்பார்.

தொடரும்………………

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s