யோபுவின் கதை – அதிகாரம் 21

யோபுவின் பதில்:

நான் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். பிறகுதான் நீங்கள் எனக்கு ஆறுதல் கூறி உதவமுடியும். நான் பேசும்பொழுது பொறுமையாய் இருங்கள். நான் பேசியபிறகு என் கருத்துக்களுடன் நீங்கள் மாறுபடக்கூடும். என்னுடைய வாதம் மனிதனுடன் அல்ல. தேவனுடன். நான் ஏன் பொறுமை காக்கவேண்டும் என எனக்குப் புரியவில்லை. என்னைக் கவனமாகப்பாருங்கள். நீங்கள் ஆச்சரியப்பட்டு வாயைக் கையால் மூடிக்கொள்வீர்கள். நான் சொன்னவற்றைச் சிந்தித்துப் பார்க்கையில் பயம் என்னை ஆட்கொண்டு பலமிழந்து போகிறேன்.

கெட்ட மனிதர்கள் ஏன் நீண்ட நாட்கள் வாழ்கிறார்கள்? அப்படி வாழ்ந்து அவர்கள் பலம்பொருந்தியவர்களாகவும் ஆகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர்களது சந்ததி வளர்ந்து பெருகி வளமாக வாழ்கிறார்கள். அத்தகைய மனிதர்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்கள் மேல் தேவன் கோபம் கொள்வதில்லை. அவர்களது காளைகள் இனவிருத்தியில் தேர்ந்தவை. அவர்களது பசுக்கள் சினைகளுக்கு சேதமில்லாமல் பல கன்றுகளை ஈனுகின்றன. அவர்களது குழந்தைகள் ஆட்டுக்குட்டிகளைப்போல் வெளியில் சென்று விளையாடுகிறார்கள். அவர்கள் குழலையும் யாழையும் இசைத்து அந்த நாதத்தில் திளைத்து மகிழ்கின்றனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் செல்வந்தர்களாய் வாழ்ந்து எந்தத் துன்பமுமின்றி இறக்கின்றார்கள். எனவே அவர்கள் தேவனை நோக்கி, தேவனே! எங்களை விட்டு விலகியிருப்பீர். உமது வழிகளை அறிய நாங்கள் விரும்பவில்லை என்று கூறுவார்கள்.

சர்வ வல்லவரைப் பணிந்து நடக்க அவர் யார்? அவரைப் பிரார்த்திப்பதால் நாம் அடையும் பயன் என்ன? என்று அவர்கள் கேட்கிறார்கள். செல்வத்தைத் தாங்கள் தேடியதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஆகவே அவர்கள் சொல்வதை நான் செவி கொடுத்துக் கேட்பதில்லை. கெட்டவர்கள் கெட்டவற்றைச் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு கெடுதலும் நேர்வதில்லை. தேவனே கோபமடைந்தாலும் அவர்கள் வாழ்வில் துன்பமில்லை. அவர்கள் காற்று முன்னால் துரும்பைப்போலவும் பெருங்காற்று பறக்கடிக்கும் பதரைப்போலவும் இருக்கிறார்கள். அவன் செய்த பாவத்துக்காக தேவன் அவனது பிள்ளைகளைத் தண்டிக்கிறார். அப்படியில்லாமல் தேவன் அவனையே தண்டிக்கவேண்டும். அதுதான் அவனுக்கு நல்ல பாடம். தனக்கு நேரப்போகும் அழிவை அவன் உணரவேண்டும். தேவனின் கோப வெள்ளத்தில் அவன் மூழ்கவேண்டும். தன் வாழ்நாட்கள் குறுகி அவன் இறக்கும்போது அவன் உறவுகளுக்கு என்ன நேரும் என்ற கவலை அவனுக்கில்லை.

உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் செயல்கள் நல்லவையா அல்லது கெட்டவையா என தீர்மானிக்கிற தேவனுக்கு அறிவு புகட்ட யார் அருகதையானவர்? ஒருவன் வாழ்நாட்கள் முழுவதும் நல்ல உடல் நலத்துடனும் நிறைந்த செல்வத்துடனும் எவ்விதத் துன்பமுமின்றி வாழ்ந்து மறைகிறான். மற்றொருவனோ ஒரு நாளேனும் மகிழ்ச்சியோடு உணவருந்த முடியாமல் துயரமுற்று மடிந்து போகிறான். ஆனால் இருவருமே எவ்வித பேதமுமின்றி மண் மூடிப்போகிறார்கள். அவர்கள் உடல் முழுதும் புழுக்கள் நெளிகின்றன.

இதோ! உங்கள் எண்ணங்களை நான் அறிவேன். நீங்கள் என்னைப்பற்றித் தவறாகக் கொண்டிருக்கும் கருத்துக்களையும் அறிவேன். தனவந்தர்களின் மாளிகைகள் எங்கே? கெட்டவர்களின் வீடுகள் எங்கே? எனக் கேட்கிறீர்கள். வழிப்போக்கர்களிடம் என்ன பார்த்தீர்கள் என நீங்கள் கேட்கவில்லையா?அதற்கான அவர்கள் பதிலை அறிவீர்களா? அவர்கள் சொல்வார்கள்: கெட்ட மனிதர்களை தேவன் எல்லா நேரங்களிலும் தண்டிப்பதில்லை என்று.

தேவனின் சினம் உச்சத்தை எட்டும்வரை அவர்களுக்கான தண்டனை நிறுத்திவைக்கப்படும். ஏன் கெட்ட வழியில் நடக்கிறாய் என யாரும் அவனைக் கேட்பதில்லை. அவனின் கெட்ட நடவடிக்கைக்காக யாரும் அவனைத் தண்டிப்பதில்லை. இருப்பினும் அவன் இறந்த பின்னால் புதைக்கப்படுவான். காலமெல்லாம் கல்லறையில் உறங்கிடுவான். பள்ளத்தாக்கின் புல்வெளிகள் அவனுக்கு இன்பமூட்டும். அவனுக்கு முன்னால் கணக்கற்றவர் போனதுபோல் அவனுக்குப் பின்னாலும் ஒவ்வொருவராய் அங்கு போய்ச் சேர்வார்கள். நீ எனக்கு ஆறுதல் கூற நினைத்து பலவரையும் கூறினாய். ஆனால் அவை எவற்றிலுமே உண்மையில்லை.

தொடரும்……………….

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s