யோபுவின் கதை – அதிகாரம் 20

நாமாத்தியனான சோபாரின் பதில்:

நீ சொன்னதெல்லாம் என்னைக் குழப்புகிறது. உனக்குப் பதில் கூற என் சிந்தனை தூண்டுகிறது.

இதோ என் பதில்:

என்னைக் குறை கூறினதைக் கேட்டேன். எனது புரிதல்கள் மூலம் உனக்கு நான் பதில் கூறுகிறேன். கெட்ட சிந்தனையாளனின் வெற்றிகள் வெற்றிகளே அல்ல. அதுபோல் இறை நம்பிக்கை இல்லாதவனின் மகிழ்ச்சியும் சொற்ப நேரம்தான். உலகம் தோன்றிய நாளிலிருந்து இதுதான் நிலைமை என்பதை நீ அறியமாட்டாயா? ஒருவனது மேன்மை வானளாவ உயர்ந்திருந்தாலும் ஒருநாள் அவன் தனது மலத்தைப் போலவே மக்கிப்போவான். அவனைத் தெரிந்தவர்கள் அவன் எங்கே என்று கேட்கும் அளவுக்கு அவன் நிலைமை ஆகிவிடும். அவன் கனவைப் போல் மறைந்து போவான். இருளின் காட்சியைப் போல் துரத்தப்படுவான். அவனைப் பார்த்த கண்களும் அவன் இருந்த இடமும் இனி அவனைக் காணாது. அவனது பிள்ளைகள் அவன் எளியவர்களுக்கு இழைத்த தீங்குக்கு வருந்தி அவர்களிடமிருந்து பெற்ற செல்வத்தைத் திரும்பக்கொடுக்கும்படி ஆகும். இளமைத் துடிப்பு நிரம்பிய அவனது எலும்புகள் அவனோடு மண்ணில் புதையும். தவறுகள் செய்வதில் மகிழ்ந்திருப்பான். அவை அவன் வாயிலுள்ள இனிப்பைப்போன்றவை. மீண்டும் மீண்டும் உணவைச் சுவைப்பதுபோல் தொடர்ந்து தவறிழைப்பான். அவன் உண்ட உணவு வயிற்றில் கெட்டுப்போய் நெளியும் பாம்பின் விஷமாக மாறும். அவன் சேர்த்த செல்வத்தையெல்லாம் தேவன் ஒன்றுமில்லாமல் செய்து விடுவார். அவன் உயிர் பாம்புகளின் விஷத்தால் உறிஞ்சப்பட்டு அவற்றின் நாக்குகளால் கொல்லப்படுவான். தேனாறும் பாலாறும் அவனுக்கு எட்டாத தூரம். ஏழைகளை வருத்தி அவர்களை வெறுங்கையர்களாக்கி, தான் கட்டாத வீடுகளை அபகரித்து சேர்த்த செல்வத்தை அனுபவிக்க முடியாமல் அவன் திரும்பக்கொடுக்கும்படி நேரும். ஆசைகளிலிருந்து அவனால் நிச்சயமாக விடுபட முடியாது. தேடிய பொருளால் அவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளமுடியாது. அவனுக்கு ஒன்றும் மிஞ்சாது. அவன் வளமையும் குன்றிவிடும்.

அவனது வளமைக்கிடையே அவனுக்கு வேதனை மேலோங்கும். துயரத்தின் முழுவீச்சில் அவன் அகப்பட்டுக்கொள்வான். அவன் வயிறு நிரம்புகின்ற நேரத்திலே தேவன் தன் கோபக்கனலால் அவனை எரித்து வீழ்த்துவார். ஒரு இரும்பு ஆயுதத்தின் தாக்குதலிலிருந்து தப்ப நினைக்கையில் ஒரு வெண்கல முனை கொண்ட அம்பால் தாக்கப்படுவான். பளபளக்கும் அந்த அம்பைத் தன் உடலிலிருந்து பிடுங்கும் போது ஏற்படும் வலியால் பெரும்பயம் அவனைச்சூழும். அவன் செல்வத்தைக் காரிருள் சூழ்ந்துகொள்ளும். அணையாத் தீ அவனை விழுங்கி அவன் இருப்பிடத்தில் உள்ளவற்றையெல்லாம் அழிக்கும். வானிலுள்ள தேவன் அவன் குற்றத்தை வெளிப்படுத்துவார். பூமியிலுள்ள மனிதர் அவனுக்கெதிராக கிளர்ந்தெழுவர். அவனது வீட்டின் செல்வமெல்லாம் தேவனின் கோப வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும். இதுவே தீயவர்களுக்குத் தேவன் கொடுக்கும் பங்கும் அவர் வழங்கும் பரிசும்.

தொடரும்……………………….

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s