யோபுவின் கதை – அதிகாரம் 18

சுவாவின் பில்தாத் மீண்டும் பேசுகிறான்…….

உனது இந்தப் பேச்சுக்களை எப்பொழுது நிறுத்தப்போகிறாய்? நிலைமையை நன்றாக உணர்ந்துகொள். பின்னர் நாம் பேசலாம். எங்களை ஏன் மிருகங்களுக்கு ஒப்பாக நினைத்து அறிவற்றவர்களாக எண்ணுகிறாய்? உன் கோபத்தால் உன்னையே நீ நார் நாராகக் கிழித்துக் கொள்கிறாய். உனக்காக இந்தப் பூமி பாழாய்ப்போகுமோ? அல்லது பாறைகளைத்தான் அவற்றின் இடத்திலிருந்து நகர்த்திவிடமுடியுமா? கெட்டவனது அடுப்பின் தீ அவிந்துபோகிறது. அவனது கூடாரத்தின் ஒளி மறைந்து விடுகிறது. அவன் விளக்கும் அவனுடன் அணைந்துபோகிறது. அவன் நடையின் வேகம் குறைந்து அவனது திட்டங்கள் அவனைக் கவிழ்த்துவிடும். அவனது பாதங்கள் வலையில் அழுந்தி அந்த வலைச்சிக்கலில் அவன் உழல்வான். அவன் குதிகால் பொறியில் நன்றாக அகப்பட்டுக்கொள்ளும். தரையிலே அவனுக்காக ஒரு சுருக்கு மறைத்துவைக்கப்பட்டிருக்கிறது. வழியிலே அவனுக்கான கண்ணி வைக்கப்பட்டிருக்கிறது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் வரும் பெரும் பயங்கரத்தால் உண்டாகும் அச்சம் அவனை நெருக்கமாய்ப் பின்தொடரும்.

அவன் வலிமை பட்டினியால் கெடும். அவன் அருகே அழிவு தயாராகக் காத்திருக்கும். அது அவன் உடல் வலிமையைப் பதம் பார்க்கும். பயங்கரமான மரணம் அவன் வலிமையை முற்றிலும் அழித்துவிடும். அவனது நம்பிக்கை அவனது கூடாரத்திலிருந்து வேரோடு பிடுங்கப்படும். அது அவனைக் கொடுங்கோல் மன்னனிடம் கொண்டு சேர்ப்பிக்கும். அவன் வெற்று ஆளாய்ப்போனதினால் அவன் கூடாரத்தில் பயங்கரம் குடியிருக்கும். அவன் குடியிருப்பில் எரிகந்தகம் தெளிக்கப்படும். அவனது வேர்கள் அழிந்து கிளைகளும் பட்டுப்போகும். இந்த பூமியில் அவனது நினைவுகள் அழிந்து அவன் பெயரற்றுப்போவான். வெளிச்சத்திலிருந்து அவன் இருளுககுத் தள்ளப்பட்டு இவ்வுலகைவிட்டு விலக்கப்படுவான். அவன் சந்ததியற்று அவன் வாழ்ந்திருந்த இடத்தில் அவனைச்சேர்ந்தவர் எவருமின்றிப்போவான்.

அவன் காலத்தவர் அவன் விதியை எண்ணி அதிர்ச்சிக்குள்ளாவார்கள். பின் வருவோரும் அச்சத்துக்குள்ளாவார்கள். கெட்டவனின் இருப்பு இவ்வளவுதான். தேவனை அறியாதவனின் இடம் இதுதான்.

தொடரும் ………………..

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s