யோபுவின் கதை – அதிகாரம் 12

சோபாருக்கு யோபுவின் பதில்:

சந்தேகமேயில்லை. உனக்குத்தான் எல்லாம் தெரியும் என எண்ணுகிறாய். உனக்குப்பின்னால் யாருமே நேர்மையாக இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறாய். நானும் உங்களைப்போல் புத்தியுள்ளவன்தான். நான் உங்களைவிடத் தாழ்ந்தவனில்லை.நீ சொன்னவையெல்லாம் எல்லாரும் அறிவார்கள். என் நண்பர்கள் யாவரும் நான் ஒரு முட்டாள் என நினைக்கிறார்கள். நான் தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன் . அவர் என் பிரார்த்தனைக்குப் பதில் சொல்லுவார். நேர்மையான ஒரு மனிதன் கேலி செய்யப்படுகிறான். துன்பத்துக்குள்ளானவன் நல்ல நிலையில் இருப்பவன் பார்வையில் இகழ்ச்சியடைகிறான். கால்கள் தடுமாறினவனை தள்ளி விடுதல் சுலபம். நல்ல நிலையில் இருப்பவர்கள் அதுபோலத்தான் நடந்துகொள்கிறார்கள். கெட்டவர்கள் கையில் செல்வம் சேர்கிறது தேவனை அவர்கள் கோபத்துக்கு உள்ளாக்குகிறார்கள். ஆனாலும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள்.

மிருகங்களைக் கேள். அவை உனக்குப் போதனை செய்யும். வானத்துப் பறவைகளைக் கேள். அவைகளும் உனக்குச்சொல்லும் உண்மையை. பூமியைக் கேள். அது உனக்கு உபதேசிக்கும். கடல் மீன்களைக் கேட்டுப்பார். அவையும் உனக்கு விவரிக்கும். இவையெல்லாம் தேவனின் கைவண்ணம் என்பதை அறியாதார் யார்? அனைத்து உயிரினங்களின் ஜீவனும் ஒவ்வொரு மனிதனின் ஆத்மாவும் அவர் வசமுள்ளது. நாக்கு உணவின் ருசி அறிவதுபோல் காதுகள் உண்மைகளை ஆராய்ந்து அறியும். முதியவர் என்றுமே அனுபவ அறிவு மிக்கவர். கடவுள் ஞானவடிவானவர். நாம் நேர்வழி நடக்க உதவி புரிவார். அவர் அழித்தால் மீண்டும் நாம் அதை உருவாக்க முடியாது. அவர் மனிதரை முடக்க எண்ணினால் யாரால் அதைத் தடுக்க முடியும்? இயற்கையின் தன்மையை அவரால் தலைகீழாக்க முடியும். அவரிடம் வலிமையும் ஞானமும் உண்டு. அவரை எதிர்ப்போரை அவர் வீழ்த்துவார். நல்லவன் கெட்டவன் இருவருமே அவர் பிடியில் உள்ளார்கள். அவர் நல்வழி காட்டுவோரை செயலிழக்கச்செய்து நீதிவான்களை மதிமயக்குகிறார்.

மன்னர்களின் பகட்டான ஆடைகளைக் கவர்ந்து அவர்களுக்கு வெறும் இடுப்புத்துணியை அணியக்கொடுக்கிறார். ஆட்சியர்களைச் சிறை பிடிக்கிறார். பலம் மிகுந்தவர்களின் வலிமையைப் பறித்துவிடுகிறார். அறிவாளிகளைக் குழப்பி முதியோரின் அறிவாற்றலை இல்லாமலாக்கி விடுகிறார். யாருமறியாச் செய்திகளை நமக்குத் தெரிவித்து இருளின் நிழல்களைப் பகல் போல் ஒளிரச் செய்கிறார். நாடுகளை உன்னதமானவையாக்கிப் பின்னால் அவற்றை அழிக்கவும் செய்கிறார். நாடுகளை விரிவாக்கிப் பின் அங்குள்ள மக்களை வெளியேறச் செய்து அவைகளைச் சிறிதாக்குகிறார். மன்னர்களின் புத்தியைச் சிதைத்து அவர்களை திக்கற்ற பாலைவனத்தில் அலையும்படிச் செய்கிறார். அவர்களை ஒளியற்ற இருளில் தள்ளி குடிகாரர்களைப்போல் தள்ளாடவைக்கிறார்.

தொடரும் ………………

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s