யோபுவின் கதை – அதிகாரம் 11

அப்பொழுது நாமாத்தியம் என்னும் இடத்தைச்சார்ந்த சோபார் என்னும் நண்பன் சொல்கிறான்:

உன் கணக்கற்ற கேள்விகளுக்கு யாராவது பதில் கூற வேண்டாமா? நீ எவ்வளவு பேசினாலும் தேவன் உன்னை மன்னிக்கமாட்டார். உனது வீம்பு வார்த்தைகளுக்கு மற்றவர் மௌனம் காப்பாரா? நீ தேவனைக் குறைகூறுவதை யாராவது தடுக்கவேண்டும். உனது வார்த்தைகள் உண்மையானவை என்றும் தேவனின் பார்வையிலே நீ தூய்மையானவன் என்றும் கூறுகிறாய். தேவன் வாய் திறந்து உனக்கு அவரது எண்ணங்களை வெளிப்படுத்தினால் நன்றாயிருக்கும். அப்பொழுது ஞானத்தின் ரகசியத்தை அவர் உனக்கு சொல்லக்கூடும். ஆனால் அதைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமல்ல. நீ இழைத்த அக்கிரமங்களுக்கு ஏற்றவாறு தேவன் உன்னைத் தண்டிக்கவில்லை என்பதை அறிந்துகொள். தேவனை முழுவதும் உணர்ந்து அவரது வல்லமையை உன்னால் அறிய முடியுமா? அவர் வல்லமை வானளாவ உயர்ந்தது. உன்னால் ஆகக்கூடியதென்ன? அது பாதாளத்தைக் காட்டிலும் ஆழமானது. உனக்கு என்ன தெரியும்? அவரது வலிமை பூமியைக் காட்டிலும் நீளமானது . கடலைக் காட்டிலும் பரந்து விரிந்தது. உன்னைச் சிறையிலடைத்தால் அவரைத்தடுப்பவர் யார்? அவர் உன்னைக் குற்றவாளிக்கூண்டிலே நிறுத்தினால் உன்னால் அவருக்குப் பதில் சொல்லமுடியாது.

மனிதரின் செயல்களை அவர் நன்கறிவார். தீய செயல்களைக் கண்டால் அவர் சும்மாயிருப்பாரா? புத்தியற்ற மனிதன் காட்டில் திரியும் கழுதைகளைப்போல் திருந்தவேமாட்டான். ‘யோபு’ நீ உன் மனதைத் தயார்ப்படுத்தி உனது கைகளை அவருக்கு நேராக விரித்து பிரார்த்தனை செய்தால் நலமாயிருக்கும். தீச்செயல்களை நினையாதே. தீவினைகளை அண்டவிடாதே. அப்பொழுது நீ வெட்கித் தலைகுனியாமல் பலத்துடன் பயப்படாமல் இருப்பாய். உனது துன்பங்கள் பாலத்தின் அடியில் கடந்துபோன நீரைப்போல் மறைந்துவிடும். உனது வாழ்நாட்கள் பட்டப் பகல்போல் ஒளிரும். இருள் சூழ்ந்த உன் வாழ்க்கைக்கு விடிவு பிறக்கும்.

நம்பிக்கை ஏற்பட்டால் பலம் பெறுவாய். பயமின்றி நிம்மதியாய் உறங்குவாய். பலரும் உன்னிடம் உதவி கோரி வருவார்கள். கெட்டவர்கள் பலமிழந்து அவர்களது நம்பிக்கை இறக்கப்போகிறவன் மூச்சினைப்போல் அழிந்துவிடும்.

தொடரும் ………….

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s