யோபுவின் கதை – அதிகாரம் 9

பில்தாதுக்கு யோபுவின் பதில்:

நீ சொல்வதெல்லாம் உண்மை என்று நான் அறிவேன். ஆனால் யாரையுமே சிறந்த நேர்மையாளன் என்று தேவன் ஒத்துக்கொள்ளமாட்டார். அதுபற்றி அவரிடம் வழக்காட முற்படுவோமானால் அவர் ஆயிரம் கேள்விகள் தொடுப்பார். நம்மால் அவைகளுக்குப் பதில் சொல்லமுடியாது. தேவன் சிறந்த ஞானமும் வலிமையுமிக்கவர். அவருடன் வழக்காடுவது என்பது நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒன்று. அவர்தம் வலிமையினால் மலைகளை நகர்த்துவார். அவரது கோபம் அவைகளைப் புரட்டிப்போடும். அவரால் பூமியை நகர்த்த முடியும். அவர் நினைத்தால் பூமியின் இடத்தையே கூட மாற்றி விடுவார். அவர் கட்டளையிட்டால் சூரியன் உதிக்காது போய்விடும். இரவில் விண்மீன்கள் ஒளிர முடியாமல் செய்துவிடுவார். தேவன் ஒருவரே வான்வெளியில் பரவி, கடல் அலைமேல் நடமாடுபவர். விண்மீன்களைப் படைத்து அவற்றை அதனதன் இடங்களில் வைத்தார். தெற்கு மண்டலங்களைப் படைத்தவரும் அவரே. விவரிக்க இயலா செயற்கரிய செயல்களையும் கணக்கில்லா அற்புதங்களையும் அவர் செய்கிறார்.

இதோ அவர் என்னருகே செல்கிறார். ஆனாலும் என்னால் அவரைக் காண இயலவில்லை. அவர் என்னைக் கடந்தும் போகிறார். ஆனால் என்னால் அவரை அறிய முடியவில்லை. அவர் விரும்பியவற்றை எடுத்துக்கொள்கிறார். அவர் என் இப்படிச்செய்கிறார் என்று கேட்டு யாராலும் அவரைத் தடுக்கமுடியாது. அகங்காரம் பிடித்தவர்களின் மீதான தேவனின் கோபம் மாற்ற இயலாதது. அவர்கள் தேவனுக்கு அடங்கிப் போகத்தான் வேண்டும். எனவே என்னைப் பற்றிய அவரது எண்ணங்களை என்னால் மாற்ற முடியாது. அவரிடம் வழக்காடுவதற்கான வார்த்தைகள் என்னிடம் ஏது? நான் நேர்வழியில் நடப்பவனாயினும், அவருடன் அதுபற்றி வழக்காடாமல் அவரது பெருங்கருணையை யாசிப்பேன். நான் அவரை அழைத்தால் அவர் ஒருவேளை கவனிக்கக்கூடும். ஆனால் எனது விளக்கங்களுக்கு அவர் செவிசாய்ப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.

அவர் புயலால் என்னைத் துன்புறுத்துகிறார். காரணமெதுவுமின்றி என்னைக் காயப்படுத்துகிறார். நான் மூச்சுவிடக்கூட முடியாமல் செய்து துன்பத்தில் தோய்த்தெடுக்கிறார். என்னைவிட தேவன் வலிமையானவர். நியாயம் என்று வரும்போது எனக்காக சாட்சி சொல்கிறவர் யார்? நானே என்னை நேர்மையானவன் என்று சொல்லிக்கொண்டால் அது உண்மையாக வாய்ப்பே இல்லை. நான் மிக நல்லவனாகவே இருக்கலாம். நானே அதைச்சொன்னால் நம்புவார் யார்? நான் உத்தமன் என்றாலும் எனது ஆன்மாவை நான் அறியேன். இந்த வாழ்க்கையை நான் வெறுக்கிறேன்.

ஒன்று சொல்கிறேன். அவர் நல்லவர்களையும் கெட்டவர்களையும் அழிக்கிறார். நல்லவனான ஒருவன் இளம்வயதிலே நோயுற்று பின் இறக்கிறான். அச்சமயம் அவர் அவனுக்கேற்பட்ட சோதனையைக் கண்டு நகைக்கிறார். உலகம் கெட்டவர்களின் பிடியில் உள்ளது. அவர் நீதிபதிகளின் முகங்களை மூடிவிடுகிறார். இவரைத்தவிர வேறு யார் அதைச்செய்கிறார்கள்?

எனது நாட்கள் வேகமாகச்செல்கின்றன. நன்மைகள் எதையும் அவை காணவில்லை. வேகமாகச் செல்கின்ற கப்பல்களைப் போலவும், இரையை வேகமாகப் பிடிக்கும் கழுகைப்போலவும் நாட்கள் ஒடுகின்றன. நான் சிரிக்க முயற்சி செய்யலாம். எனது எல்லாத் துன்பங்களையும் மறக்க முயலலாம். அதற்குப்பிறகும் அவர் கொடுக்கும் வலியை எண்ணி நான் அஞ்சுகிறேன். எனக்குத்தெரியும் தேவன் என்னைக் குற்றமற்றவன் என்று ஒத்துக்கொள்ளவே மாட்டார். நான் பொல்லாதவன் என்று அவர் முடிவெடுத்தபின் அவருடன் வீணாக ஏன் நான் வழக்காடவேண்டும்?

நான் பனி நீரால் என் உடம்பைக்கழுவி சுத்தம் செய்து கொண்டாலும் தேவன் என்னைச் சேற்றில் இறக்கி விடுவார். பின்னர் எனது ஆடைகளே என்னைக் கண்டு அருவருக்கும். தேவன் மனிதரில்லையாதலால் நான் அவருடன் நீதிமன்றத்தில் வாதாடமுடியாது. எங்கள் இருவரில் யார் சொல்வது சரி என்று தீர்மானிக்க எவராலும் முடியாது. அவர் எனக்குத் துன்பம் தருவதை நிறுத்தட்டும். அவரைப் பற்றிய பயம் என்னைக் கலங்கவைக்காமலிருக்கட்டும். அதன் பின்னர் அவருக்குப் பயப்படாமல் நான் பேசுவேன். ஆனால் இப்பொழுதோ அதுபோன்று நடக்க வாய்ப்பில்லை.

தொடரும்………………

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s