யோபுவின் கதை – அதிகாரம் 8

சுவாவில் வாழ்ந்த யோபுவின் மற்றொரு நண்பன் பில்தாத் யோபுவிடம் கூறுகிறான்:

எவ்வளவு காலம் நீ இப்படியெல்லாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பாய்?எதுவரை உன் வார்த்தைகள் கடுங்காற்றின் வேகத்தில் இருக்கும்? தேவன் நியாயமானவற்றை மாற்ற முயல்வாரா? அவர் நீதியிலிருந்து ஒரு போதும் விலகமாட்டார். உனது பிள்ளைகள் தவறானவற்றைச் செய்து அவர்களின் தவறுகளுக்காக தேவன் அவர்களைத் தண்டித்திருந்தால் நீ தேவனை வழிபடு. அவரிடம் உதவி கேள்.நீ நேர்மையானவனாய் இருந்தால் தேவன் உன் வழிபாட்டுக்குச் செவிசாய்ப்பார். நீ இழந்த செல்வங்களையெல்லாம் மீண்டும் கொடுப்பார். முன்பு உன்னிடம் இருந்த செல்வங்களைக்காட்டிலும் பெருஞ்செல்வத்தை உனக்கு அளிப்பார்.

நமது முன்னோர்கள் அறிந்தவை ஏராளம். அவற்றைக் கற்று ஆராய முயற்சி செய். நமது வாழ்க்கை நிழலைப்போன்றது. நொடியில் மறைந்துவிடும். அந்தக் குறுகிய காலத்தில் நாம் கற்றுக்கொள்வது ஒன்றுமேயில்லை. நமது முன்னோர் நம்மை வழி நடத்த முடியும். அவர்கள் சொன்னவற்றை கவனத்தில் கொண்டால் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். சேறு இல்லாமல் நாணல் வளருமா? நீரின்றி கோரைப்புல் முளைக்குமா? அவை வெட்டப்படாமல் வளர்ந்து கொண்டிருக்கும் போது நீர் இல்லையென்றால் வாடி இறந்துவிடுமன்றோ? தேவனை மறுப்பவர்களின் கதியும் அந்தத் தாவரங்களைப் போன்றதுதான். அத்தகைய கபடதாரியின் நம்பிக்கை அழிந்து போகும். அவனுடைய நம்பிக்கை சிலந்தி வலைபோல் மிகவும் பலவீனமானது. பலவீனமான அந்த வலையில் அவன் சாய்ந்தால் அது தாங்காமல் அறுந்துவிடும்.

கெட்ட மனிதர்கள் வெயிலின் வெம்மை இல்லாதபொழுது தோட்டமெங்கும் பரவி வளரும் களைகளைப்போன்றவர். களைகளின் வேர்கள் கற்களைச் சுற்றிப்பரவி பாறைகளுக்கிடையே நிலை கொள்ளும். முடிவில் சிலர் நிலத்தைத் தோண்டி களைகளை அகற்றுவர். பிறகு யாருக்கும் முன்பு அந்த இடத்தில் என்ன இருந்தது என்பதே தெரியாது. பார்! இதுதான் அவன் மகிழ்ச்சி தந்த பாடம். ஆனாலும் அங்கே மற்ற புதியவர்கள் தோன்றி வளர்வார்கள்.

தெரிந்துகொள். தேவன் உத்தமர்களை ஒருபோதும் வெறுத்து ஒதுக்கமாட்டான். கெட்ட மனிதர்களுக்கு எப்போதும் அவர் உதவுவதில்லை. உன்னை அவர் மகிழ்ச்சியில் ஆழ்த்தி மீண்டும் சிரிக்கச் செய்வார். பின்னர் உன் எதிரிகள் தங்கள் செயல்களுக்காக வருந்தி தலைகுனிவார்கள். அவர்கள் தங்கள் இருப்பிடத்தை இழப்பார்கள்.

தொடரும்…………….

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s