யோபுவின் கதை – அதிகாரம் 7

மனிதர்களுக்கு இவ்வுலகவாழ்வில் போராட குறிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. அவர்கள் கூலியாளைப்போல் ஒவ்வொரு நாளும் வேலை செய்யவேண்டும். ஒரு அடிமை நாளின் முடிவுக்காக காத்திருக்கிறான். நாள் முடிந்தால் அவன் வேலையை நிறுத்தலாம். ஒரு கூலியாள் கூலியைப் பெறுவதற்காகக் காத்திருக்கிறான். ஆனால் நான் எதற்காகவும் காத்திருக்கத்தேவையில்லை. ஒவ்வொரு இரவும் நான் தூங்கப்போகையில் மிகுந்த வருத்தமடைகிறேன். எப்பொழுது இரவு முடியுமென ஏங்குகிறேன். ஆனால் அது முடிவதில்லை. நான் தூங்கவும் முடிவதில்லை. முடிவில் விடிகிறது. என் உடம்பு முழுவதும் புழுதியும் புழுக்களும். என் தோல் வெடிப்புற்று சகிக்க முடியாததாகிவிட்டது. எனது வாழ்க்கை வேகமாக நகர்கிறது. ஒரு நெசவாளியின் தறி நாடாவைப்போல் அது துரித கதியில் இயங்குகிறது. வாழ்க்கை இனி சரியாகும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.

இறைவா! தெரிந்துகொள் எனது வாழ்க்கை ஒருவன் விடும் மூச்சைப்போல் குறுகியது. எனக்குத்தெரியும் நான் இனி ஒருபோதும் சுகமடையப்போவதில்லை என்று. நீர் இப்பொழுது என்னைப் பார்க்கிறீர். ஆனால் விரைவிலேயே உம்மால் என்னைப் பார்க்க முடியாமற்போகும். நீர் என்னைத் தேடுவீர். ஆனால் நான் இருக்கமாட்டேன். மேகமொன்று வானிலிருந்து மறைவது ஒரு மனிதன் இறப்பதைப்போன்றது. இறந்தவன் மீண்டும் பூமிக்குத் திரும்புவதில்லை. அவனை அறிந்தவர்கள் விரைவிலேயே அவனை மறந்து விடுவார்கள். எனவே நான் அமைதியாய் இருக்கப்போவதில்லை. உம்மீது நான் எவ்வளவு கோபமாயும் வருத்தமாயும் இருக்கிறேன் என்பதை கூறப்போகிறேன். நான் என்ன கடலா அல்லது திமிங்கலமா? நீர் என்னை ஒவ்வொரு நாளும் கண்காணிக்க. நான் படுத்து இளைப்பாற முயல்கிறேன். ஒருவேளை எனது வலி தூக்கத்தினால் குறையக்கூடும். ஆனால் தூக்கத்தில்கூட கனவுகளாலும் துர்க்காட்சிகளாலும் நீர் என்னைக் கலங்கவைக்கிறீர்.

இதுபோன்ற வாழ்க்கையை வெறுக்கிறேன். வாழ்வதைக்காட்டிலும் நான் மரணத்தையே விரும்புகிறேன். எனது வாழ்க்கை அர்த்தமற்றுப்போய்விட்டது. தனிமையில் சாக விரும்புகிறேன். என்னை விட்டுவிடும். என் நாட்கள் அவ்வளவும் மாயை. மனிதன் உமக்கு அத்தனை முக்கியமானவனா? மனிதரின் பேரில் உமக்கு ஏன் இவ்வளவு அக்கறை?. ஒவ்வொரு நாள் காலையிலும் அவனைக் கண்காணித்து அவனது ஒவ்வொரு செயலையும் கணத்துக்குக்கணம் சோதிப்பதற்கு என்ன காரணம்?

என் உமிழ் நீரை நான் விழுங்காதபடி எத்தனை காலம் என்னை விட்டு விலகாமலிருப்பீர்? நான் என்ன தவறு செய்தேன். மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்று நீர் அறிவீர். அது எனக்குத் தெரியும். ஆனால் உமக்கு நான் என்ன செய்தேன். கண்காணிப்பதற்கு என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்?உமக்கு நான் துன்பம் இழைத்தேனா? நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து என் மேல் அன்பு செலுத்த மாட்டீரா? நான் விரைவில் இறந்து போவேன். பின்னர் நீர் தேடினால் நான் கிடைக்கமாட்டேன்.

தொடரும்………………….

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s