திருவெம்பாவை – 2

11

நெருப்பு நிறத்தவனே
வெண்ணீறு அணிந்தவனே
எங்கள் செல்வனே
மையிட்ட அகன்ற விழிகளும்
சிறுத்த இடையுமுடைய
உமையின் மணவாளா
வண்டுகள் நிறை
அகன்ற தடாகத்திலே
‘முகேர்’ என ஒலியெழுப்பி
குடைந்து குடைந்து நீராடி
உன் திருவடிகள் பாடி
தொடர்ந்து உந்தன் அடிமையானோம்
உயிர்களை ஆட்கொண்டருளவது
உன் விளையாட்டு
அதனாலே உய்வடைந்தோம்
உன் வழிபாட்டில்
தளர்வடையா நிலை தந்து
காத்தருள்வாய்.

12

நம்மைப் பிடித்த
பிறவித் துயர் நீங்க
நாம் மகிழ்ந்து
முழுகியெழும்
தூய நீருடையான்
அழகியதில்லைச் சபையினிலே
அனலேந்தி நடம் புரியும்
கூத்து வல்லான்
விண்ணுலகும்
மண்ணுலகும்
படைத்து,
காத்து, அழிப்பதெல்லாம்
அவன் விளையாட்டு
அவன் புகழ் பாடி
வளையல்களும்
ஒட்டியாணங்களும்
ஒலியெழுப்ப
அழகிய கூந்தலின் மேல்
வண்டுகள் ரீங்கரிக்க
மலர்கள் நிறை பொய்கையில் நீராடி
அவன் பொன்னடி போற்றுவோம்
பெரிய சுனை நீரில் ஆடுவோம்
பெண்ணே இவற்றை
நீ எண்ணிப்பார்.

13

நீர் பொங்கும் தடாகத்தில்
நிறைந்திருக்கிறது
கரிய நீலோத்பலமும்
செந்தாமரையும்
நீர்ப்பறவைகள் அங்கே
சப்திக்கின்றன
பாம்பு பின்னலிடுகிறது
குளிக்க வருவோர் அங்கே
கூடுகின்றனர்.
இறைவனையும்
இறைவியையும் ஒத்த
பொய்கையிது
பாய்ந்து பாய்ந்து
இதில் நீராடுவோம்
சங்கு வளையல்களும்
காற் சிலம்புகளும்
கலந்தொலிக்க
நம் மார்பகங்கள்
பொங்கிப் பூரிக்க
பொய்கை நீர்
பொங்கியெழ
மூழ்கியெழுவோம்
இத்தாமரைத் தடாகத்தில்.

14

காதில் தோடுகள் ஆட
பசும்பொன் அணிகலன்கள் ஆட
தலையில் சூடிய மாலை ஆட
அம் மாலையை மொய்க்கும்
வண்டுகள் ஆட
நாம்
குளிர்ந்த நீரில்
மூழ்கியெழுவோம்
பின்
சிற்றம்பலப் புகழ் பாடி
வேதப் பொருள் பாடி
வேதப்பொருளாய் நிற்கும்
இறைவனைப்பாடி
சடையினிலே கொன்றை மலரணிந்த
ஞானப்பேரொளி பாடி
அவன்
தோற்றமும் முடிவுமாய்
இருப்பதையும் பாடி
நம்மைத் தேர்ந்தெடுத்து
வளர்த்தெடுத்த
பராசக்தியின்
பாதகமலங்களைப்பாடி
ஆடுவோம்.

15

அழகிய மார்பகங்களையுடைய பெண்களே!
ஒருத்தி
ஒரு சமயம்
எம் பெருமானே என்பாள்
பிறிதோர் சமயத்தில்
அவன் மெய்ப்புகழை
ஓயாமல் உச்சரிப்பாள்
சில சமயம்
மகிழ்ச்சியினால்
கண்ணீர் வடிப்பாள்
இன்னொரு வேளையிலோ
தரையில் கிடந்திடுவாள்.
வானவரை வணங்காள்
பித்தனிடம்
பித்தாகிடுவாள்
இவளை இப்படித்
தன் வயப்படுத்தியவர் யார்?
நம் இறைவனை
வாயாரப்புகழ்ந்து
மலர்கள் நிறைந்த
பொய்கையிலே
நீராடுவோம்.

16

மேகமே!
இக்கடல் நீரை உண்டு
இதன் நீரைக் குறைத்து
மேல் வானில் எழுந்து
எம் உமையம்மையின்
நீல நிறம் பெற்றாய்
உனது மின்னல்
உமையின் சிற்றிடை
உனது இடியோ
தேவியின் திருவடிச் சிலம்பு முழக்கம்
நீ வீசிய வானவில்
அம்பிகையின் புருவம்
சிவனாரின் அன்பருக்கு முதலிலே
அருள் பொழிந்து
பின்
எங்களுக்கும் அருள்வாய்
மேகமே!

17

இயற்கை மணங்கமழும்
கருங்குழலீ!
சிவந்த கண்கள் கொண்ட
திருமால்
நான்முகன்
மற்றும்
தேவர்கள்
இவர்கள் எவரிடமும் இல்லாப்
பேரின்பம்
சிவனால் நமக்குச் சொந்தம்
நம் குற்றங்கள் களைந்து
இப்பேரின்பம் நல்க
அவன்
நம் இல்லங்கள் தோறும் வருகிறான்
தன் செங்கமலப் பொற்பாதம்
தந்தருளும் சேவகன்
அவன்
கருணை சுரக்கும் கண்கள் கொண்ட
அரசன்
அடியவரின் அமுதம் அவன்
தாமரைப் பொய்கையில்
மூழ்கி நீராடி
அவன் புகழ் பாடுவோம்.

18

பெண்ணே!
அண்ணாமலையார்
திருவடிகள் தொழுகின்ற
தேவர் முடி ரத்தினங்கள்
ஒளியிழக்கும்
படைத்தவனின் முன்னாலே
பகலவனும் ஒளியிழந்தான்
குளிர்ச்சி மிகு
விண் மீன்கள்
தாமும் ஒளி மங்கும்
இறைவனோ
ஆணாகப்
பெண்ணாக
மாதொருபாகனாக
இவை அனைத்திற்கும்
வேற்றாக இருக்கின்றான்
விண்ணாகி
மண்ணாகி
வேறாய
பொருளானவன்
அவன் அழிவற்றவன்
கண்ணிறைந்த அமுதனின்
புகழ் பாடிப்
பூம்புனலாடுவோம்

19

எங்கள் பெருமானே!
தாயே தன் பிள்ளையைக் காப்பாள்
அவளிடம் போய்
இப்பிள்ளை உனக்கு அடைக்கலம் என்றால்
அது மிகைதானே.
உனக்கு ஒன்று சொல்லுகிறோம்
கேட்பாயாக
எமது மார்பகங்கள்
உனது அன்பரல்லாதார்
தோள் சேராது
உன் தொண்டு தவிர
எங்கள் கைகள் வேறெதுவும் செய்யாது
இரவும் பகலும்
எங்கள் கண்கள்
உன்னையன்றி
வேறொன்றும் காணாது
இப்படியிருக்க
நீ அருள்வாயேல்
எத்திக்கில் சூரியன் உதித்தால்
எங்களுக்கென்ன?

20

அனைத்துக்கும் முதலாவனவனே
உனக்கு வணக்கம்
அனைத்துக்கும் முடிவானவனே
உனக்கு வணக்கம்
அனைத்து உயிர்களின் ஊற்றே
உனக்கு வணக்கம்
அனைத்து உயிர்களுக்கும்
இன்பமூட்டுபவனே
உனக்கு வணக்கம்
அனைத்து உயிர்களுக்கும்
விடுதலை கொடுப்பவனே
உனக்கு வணக்கம்
திருமாலும்
நான்முகனும்
காணவியலா
உன் திருவடிகளுக்கு வணக்கம்
எங்களை
ஆட்கொண்டு அருள்பவனே
உன் பொன்மலர்ப் பாதங்களுக்கு
வணக்கம்
மார்கழி நீராட
அருளியவா
உனக்கு வணக்கம்.

Advertisements
This entry was posted in Thiruvembavai and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s