பாதையில் வந்த பறவை

American_Robin_with_worm

பறவை ஒன்று தோட்டப்பாதையில் வந்தது
தெரியாது அதற்கு
அதை நான் பார்க்கிறேன் என்று
ஒரு மண்புழுவைக் கொத்தித் துண்டாக்கி
அதை அப்படியே விழுங்கியது
பின்
அருகிலிருந்த புல்லிலிருந்து
பருகியது ஒரு பனித்துளியை
சுவற்றுக்குப் பக்கவாட்டில் தத்தி
வண்டு ஒன்றுக்கு வழி விட்டது
தன் கண்களை வேகமாய்ச் சுழற்றிப்
பார்த்தது எல்லா பக்கமும்
அதன் கண்கள் இரண்டும்
பயத்தில் தோய்ந்து பளிங்கு மணிகளாய்த் தோன்றின
ஏதோ ஆபத்தில் இருப்பதுபோல்
தன் பஞ்சுத்தலையை
அதிர்ச்சியுடன் அசைத்தது
மிகுந்த எச்சரிக்கையுடன்
சிறு ரொட்டித்துண்டு ஒன்றைக் கொடுத்தேன்
அதுவோ
தன் சிறகுகளை விரித்து
தூரத்தில் இருக்கும்
தன் கூடு நோக்கிப் பறந்தது
வானக்கடலைப் பிரிக்கும்
துடுப்புகளாய் அதன் சிறகுகள்
பறத்தலின் ஓசை வெறும் நிசப்தம்
மனிதன் தீண்டிய பட்டாம் பூச்சிகள்
பகலில்
ஓசையின்றிப் பறப்பது போல்
பறந்தது அப்பறவை.

எமிலி டிக்கின்சன் (1830-1886) A BIRD CAME DOWN THE WALK  என்கிற கவிதையின் மொழியாக்கம்.

In Photo: American Robin (Turdus migratorius): Photo by Ryan E. Poplin.

Image Courtesy: Wikimidia Commons

Advertisements
This entry was posted in Translated poems and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s