நாச்சியார் திருமொழி-10

நாச்சியார் திருமொழி – பத்தாம் திருமொழி
பிரிவாற்றாமை

(1)
கார்காலத்தில் மலர்ந்த காந்தள் மலர்களே !
உங்களைப் போர்க்கோலம் புனைந்து
என்மேல் ஏவிய
கறுத்த கடல் வண்ணன்
எங்கே இருக்கின்றான் ?
இனி நான் யாரிடம் போய் முறையிடுவேன் ?
அழகு மிளிர் துளசி மாலைக்கு ஏங்கி ஓடும்
நெஞ்சினைக் கொண்டவளாய் ஆனேனே
ஐயோ !!

(2)
உயரப் பூத்திருக்கும் காந்தள் மலர்களே !
மேலுலகங்கள் எல்லாம் கடந்து
அவற்றுக்கும் மேலே
பரமபதத்திலே நிலை கொண்ட
வேத முதல்வனின்
வலக்கை மேல் தோன்றும் சக்கரத்தின்
வெஞ்சுடர் போல் எரிக்காமல்
துன்பம் தவிர்த்த அடியார் கூட்டத்திடை
என்னைச் சேர்க்க மாட்டீர்களா ?

(3)
அம்மா ! கோவைக்கொடியே !
நீ உன் சிவந்த பழங்களைக்காட்டி
என் ஆவி போக்காதே.
உன் சிவந்த பழங்கள்
அழகரின் சிவந்த அதரங்களை நினைவூட்டி அச்சுறுத்துகின்றன
பாவியான நான் பிறந்த பின்னே
பாம்பணையான் பெருமானுக்கும்
அப்பாம்பினைப் போலவே
இரட்டை நாக்குகள் உண்டாயின போலும்
காப்பதிலே காலம் தாழ்த்தும் கன்ணன் குறை மறக்காமல்
அதையே நினைத்திருந்து
நான் நாணமற்றுப்போவதோ !

(4)
அம்மா ! முல்லைக்கொடியே !
கம்பீரம் மிக்கவளே !
உன் சிரிப்பாலே
என்னை அல்லல் படுத்தாதே
முல்லையே உனனைச் சரணடைந்தேன்
வரம்பினை மீறிய அரக்கி சூர்ப்பனகை
அவள் மூக்கினை அறுத்திட்டான் ராமன்
அவன் வார்த்தைகளே பொய்யாகிப் போய்விட்டால்
நான்
பெரியாழ்வார் மகளாய்ப் பிறந்ததும்
பொய்யாகும் போலுள்ளதே.

(5)
பாடும் குயில்களே !
இது என்ன பாட்டா அல்லது கூச்சலா ?
நன்மைமிகு திருமலையான்
எனக்கு ஒரு வாழ்வு தந்தால்
நீங்கள்
அப்போது வந்து பாடுங்கள்
ஆடுகின்ற கருடக் கொடியோன்
அருள் கூர்ந்து வந்து சேர்வானேல்
கூவி அழைக்கிறேன்
உங்கள் பாட்டுக்களை
அப்போது நான் கேட்கிறேன்.

(6)
அழகிய மயில்களே !
கண்ணனின் திருக்கோலம்போல்
சிறந்த நாட்டியம் பழகி ஆடுகின்ற
உங்கள் கால்களில் வீழ்கின்றேன்
(இந்த ஆட்டத்தை நிறுத்துங்கள்)
படமெடுத்து ஆடுகின்ற பாம்பின் படுக்கையிலே
பற்பல காலமும் பள்ளிகொண்ட மணவாளர்
எனக்குக் கொடுத்த பரிசு
இதோ நான் உங்கள் காலடியில் வீழ்ந்ததேயாம்.

(7)
நடனமாடித் தோகை விரிக்கின்ற மயில்களே !
பாவியான எனக்கு
உங்கள் நடனத்தைக் காணக் கண்ணில்லை
குடக்கூத்தாடின கோவிந்தன்
மன்னர்கள் போல் துன்புறுத்தி
என் உடைமைகளைக் கவர்ந்து கொண்டான்
என் நிலை தெரியாமல்
நீங்கள் என்முன் கூத்தாடுதல் தகுமோ ?

(8)
மேகமே ! மேகமே !
மேற்புறம் மண் பூசி
உள்ளிருக்கும் மெழுகை உருக்கி
வெளியே ஊற்றினாற் போல்
என்னை அணைத்து
என் உள்ளிருக்கும் உயிர் அழிப்பவர்
நன்மை மிகு வேங்கடமலையில் உறையும்
அழகிய பெருமான்
நான் என் நெஞ்சினில் இறைஞ்சுவதுபோலே
அவர் என்னை அணைத்து நெருங்கச் செய்
பின்னர் பொழிவாய் மேகமே.

(9)
கடலே ! கடலே !
உன்னைக் கடைந்து
கலக்கி
உன் உடலில் புகுந்து
அமுதம் பெற்றதுபோலே
என் உடலிலும் ஊடுருவி
என் உயிரை அறுக்கும் மாயனிடம்
நான் படும் துயரமெல்லாம்
நாகதேவனிடம் போய்
நீ சொல்லுவாயா ?

(10)
என்னுயிர்த்தோழி !
பாம்புப்படுக்கையில் துயில் கொள்ளும்
நம்பெருமான்
பெரும்செல்வந்தர்
மகா பெரியவர்
நாமோ அற்ப மானுடர்
என்ன செய்வது ?
வில்லிபுத்தூர் தலைவர் பெரியாழ்வார்
தன் அன்பரான அப்பெருமானை
தம்மால் முடிந்த வழிகளாலே அழைப்பாராகில்
அப்போது நாம் அவனைக்
கண்குளிரக் காணலாம்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Advertisements
This entry was posted in Nachiyar Thirumozi and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s