மதுரகவியாழ்வார்

மதுரகவியாழ்வார் பாண்டியநாட்டிலே திருக்கோளூர் என்னும் ஊரில் அவதரித்தார். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு. நம்மாழ்வாரைத் தெய்வமாக எண்ணி அவரது சீடராக ‘திருவாய்மொழி’யைப் பரப்பியவர். மதுரகவியாரின் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பதினோரு பாசுரங்கள் கொண்ட பிரபந்தம். இது ஒன்று மட்டுமே நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் இவரது பங்கு. இவரை ஆழ்வார்கள் வரிசையில் சேர்த்ததற்கு முக்கிய காரணம் இவர் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை உலகறியச்செய்தவர் என்பதால்தான்.

இவரது கண்ணிநுண் சிறுத்தாம்பு எளிய தமிழ் வடிவில்……..

‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’

937

நுட்பமான முடிச்சுக்கள் கொண்ட
சிறு கயிறு
அதனால்
தன்னைக் கட்டும்படி செய்து கொண்டவன்
மாயக்கண்ணன்
அவன் பெயர் சொல்வதைவிட
தென்குருகூர்த் தலைவர் நம்மாழ்வார்
அவர் பெயர் சொன்னாலே தித்திக்கும்
என் நாவில் அமுது ஊறும்.

938

நாவினால் ஆழ்வாரைப்பாடித்துதித்து
இன்பமடைந்தேன்
அவரது பொற்பாதங்களோடு
பொருந்தி விட்டேன்
இது சத்தியம்!
அவரைத்தவிர வேறு தெய்வமறியேன்
குருகூர்த்தலைவனின் பாசுரங்களை
இன்னிசையோடு பாடித்திரிவேன்.

939

ஆழ்வாரை விட்டுத் திரும்பி வந்தாலும்
தேவர் பிரான் கார் வண்ணனின்
அழகிய வடிவம் காண்பேன் நான்.
பெருமையும் கருணையும் கொண்ட
குருகூர்த்தலைவனின் அடிமை நான்
அதனாலே
பகவானை அடையும் நற்பேறு பெற்றேன்.

940

நல்ல குணம் மிகுந்த
வேதங்கள் நான்கிலும் வல்ல வேதியர்
என்னைத்
தாழ்வின் வடிவாக எண்ணுகின்றார்
ஆதலால்
அன்னையும் பிதாவுமாய்
என்னை ஆட்கொண்டருளும்
நம்மாழ்வாரே என் தலைவர்.

941

நான்
முன்பெல்லாம்
பிறரது நல்ல பொருள்களை விரும்பினேன்
பிறர் பெண்களுக்கும் ஆசைப்பட்டேன்
ஆனால்
இப்போதோ
செம்பொன் மாடங்கள் கொண்ட
திருக்குருகூர்த் தலைவனுக்கு
அன்பனாகி
அடியேன்
நல்லவனானேன்.

942

இன்று முதல்
ஏழேழு பிறவிகளிலும்
குருபக்தி நிலைத்து நின்று
ஆழ்வாரின் புகழ் துதிக்க
அவரே அருள் செய்தார்
குன்றுகள் போல் உயர்ந்த மாடங்கள் நிறை
திருக்குருகூர்த் தலைவர்
அவர்
இனி எக்காலத்தும்
என்னை இகழாமல்
ஆதரிப்பார்
இதனை அனுபவத்தால் அறிவீர்கள்!

943

காரியார் புதல்வர் நம்மாழ்வார்
என்னிடம் பேரன்பு கொண்டு
கொடிய பழைய பாவங்களை
அழியச்செய்தார்
ஆதலால்
அழகிய தமிழ்க்கவிதைகள் பாடிய
அந்த சடகோபரின் அருளை
எட்டுத்திசைகளிலும் எடுத்துரைப்பேன்.

944

எம்பெருமானின்
திருவருளைக்கொண்டாடும்
அடியவர்கள் இன்பமுற
அருமையான வேதத்தின் உட்பொருளை
அழகு தமிழிலே
பாடியுள்ளார் பாசுரங்கள் ஆயிரம்
நம்மாழ்வாரின் இப்பேரருள்
உலகில் மிகவும் உயர்ந்தது.

945

சிறந்த வேதியர் ஓதுகிற
வேதத்தின் உட்பொருள் நிலைத்து நிற்க
நம்மாழ்வார்
திருவாய்மொழி பாடி
என் நெஞ்சில் நிலைக்கச்செய்தார்
தக்க குணங்கள் வாய்ந்த
சடகோபருக்கு அடிமை செய்ய
ஆசை கொண்டேன் நான்
அதுவே
அவர் மீது நான் கொண்ட பக்தியின் பயன்.

946

மற்றவர் திருந்துவதால்
பயனேதுமில்லை என்றாலும்
அவர்கள்
திருந்தவே தகுதியற்றவர் என்றாலும்
தன கருணையினால்
அளவில்லாப்பொறுமையுடன்
திருத்தி
அவர்களை ஆட்கொள்வார் ஆழ்வார் .
திருக்குருகூரிலே எங்கும்
குயில்கள் கூவும் சோலைகள்
அவ்வூர் நம்பியே!
உன் திருவடிகள் மீது பக்தி கொள்ள
முயல்கின்றேன்.

947

இறைவனுக்கு அன்பு அடியாரிடம்
திருக்குருகூர் நம்பிக்கு அன்பு
இறைவனின் அடியாரிடம்
எனக்கோ
இறைவனிடத்தும்
இறையடியாரிடத்தும்
அன்பு கொண்ட நம்மாழ்வார் ஆசான்
அவரது அன்பனாய்
நான் பாடிய பாசுரங்கள் ஓதுவோர்
பரமபதம் அடைவர்.

Advertisements
This entry was posted in Uncategorized and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s