காஸா 

Gaza_15.07.2014

ரத்தத்தில் தோய்ந்த குழந்தைகள்
உருவாவதற்கு முன்பே
அவர்களின் சிரங்கள் சிதறடிக்கப்பட்டன.
மெல்லிய கட்டுத்துணி -துணி – மேலும் துணி
முடிவில்லாத நீளத்தில்
அந்த நீளமோ
காஸாவின் ரத்தம் முழுவதையும்
துடைத்தெடுக்கமுடியா நீளம்
ரத்த ஆறு ஓடுகின்றது
பாலை மணலை வெள்ளமாக்கிக் கொண்டு
கனலும் வெறுப்புடன்
முடிவில்லா ஒரு ரத்த ஓடை
கொப்பளிக்கும் சிவப்பு ஆறு
ஒரு வகையில்
வறண்டுபோன
அந்த அநாதை நிலத்திலே
ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை குண்டு வெடிக்கின்றது
துண்டு நிலமான காஸா வில்
மீதமிருப்பதைத் துண்டாட.
அப்பாவிக்குழந்தைகளின் கைகளில் கறை
அதனால்
நமது மொத்த கௌரவத்தையும்
பண்பையும்
இழந்துவிட்டோம்
கொல்லப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகளின்
உடல்களைப் பாருங்கள் ……
பகைமை எண்ணம்  ஏதுமின்றி
எந்தப் பயனுமின்றி
சிந்திய ரத்தத்தைப் பார்த்து
அந்தக் காயம் நிறைந்த முகங்கள் சிரிப்பதை
அவர்களது வெற்று விழிகள் வெறிப்பதை
குழந்தைகள்
அவர்களது பெற்றோர்கள்
இவர்களின் வீணான சாவுகள்
இதிலிருந்து
நாம் கற்றுக்கொள்ள மறுத்தாலும்
நாடே
உலகமே
நிறுத்துங்கள் இந்த ரத்தக்குளியலை.
கவனம்
சமாதானம்

Shaymaa_al-Masri,_five_years_old,_at_a-Shifaa_Hospital,_Gaza._Shaymaa_was_injured_when_her_uncle’s_house_was_bombed_in_the_early_afternoon_of_9_July_2014

நன்றி; தி ஹிந்து. நன்றி: Wikipedia

தி ஹிந்து  நாளிதழில்வெளியான சுதீப் சென் அவர்களின் “காஸா ” என்ற ஆங்கிலக்கவிதையின் தமிழாக்கம். Link here

Advertisements
This entry was posted in Translated poems and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s