பெரியாழ்வார்

திருப்பல்லாண் டு

பெரியாழ்வார்  இவரது இயற்பெயர் விஷ்ணுசித்தர். தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவர்.இவரது காலம் 8ம் நூற்றாண்டு.திருப்பல் லாண்டு என்னும் 12 பாசுரங்களையும் பெரியாழ்வார் திருமொழி என்னும் 461 பாடல்களையும் இயற்றியவர்.
நாலாயிரத் திவ்யப்ரபந்தத்தில் நாதமுனிகள்  வகுத்த வரிசையின்படி இவரது திருப்பல்லாண்டுதான் முதலில் இடம் பெறுகின்றது. வேதத்துக்கு முன்னும் பின்னும் பிரண வமந்திரமான ஓம் எனும் மந்திரத்தை ஓதுவார்கள். அது போலவே தமிழ் வேதமான நாலாயிரத் திவ்யப்ரபந்தத்தின் முன்னும் பின்னும் ஒங்காரப்பொருள் கொண்ட திருப்பல்லாண்டு ஓதப்படவேண்டும். பிரபந்தத்துக்கு திருப்பல்லாண்டுதான் பிரணவம்.இறைவன் மீது கொண்ட  பரிவால் அவனுக்கே நன்மைகள் வேண்டி திருப்பல்லாண்டைப்பாடியதால் இவர் பெரியாழ்வார் என அழைக்கப்பட்டார்.
உண்டோ  திருபல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர்?
என திருப்பல்லாண்டின் பெருமையை மணவாள மாமுனிகள்  “உபதேச ரத்ன  மாலையில்” கூறுகிறார். இனி திருப்பல்லாண்டின்  எளிய தமிழ் வடிவம்:
1.
மல்லர்களை வெற்றிகொண்ட
வலிமையான தோள்களை உடையவனே!
மணிவண்ணா!
உன் சிவந்த திருவடிகளின் அழகுக்குக்
காலங்கள் உள்ளவரை
காவலை வேண்டுகிறேன்.
2.
உன் அடியவர்களுக்கும் உனக்கும் பிரிவே இல்லாமல்
பல்லாயிரம் ஆண்டுகள் கழிய வேண்டும்
வடிவாய் உன் வலப்பக்க மார்பிலே உறைகின்ற மங்கை நல்லாள்
பல்லாண்டு மங்களமாய் வாழவேண்டும்
உன் வலக்கையில் ஒளி  வீசும் சக்கரமும்
போரில் பேரொலி முழங்கும் பாஞ்சசன்யமும்
பல்லாண்டு மங்களமாய்த்    திகழவேண்டும்.
3.
பெருமாளுக்குப்பணி செய்து
நிலைத்து நிற்போ ர் இருப்பீராகில்
எங்களோடு சேர்ந்து
திருநாளுக்குப் புழுதிமண் சுமந்து வாருங்கள்
அத்திருநாளில் விரும்பி ஈடுபடுங்கள்
சோற்றுக்காக அயலாரிடம் அடிமைப்பட்டவரா?
உங்களுக்கு எங்கள் கூட்டத்தில் இடமில்லை.
ஏழேழு தலைமுறைகளாய்
நாங்கள் குற்றமற்றவர்கள்
அரக்கர்கள் வாழ்ந்த இலங்கையிலே
படைகொண்டு
தீயவர்களை வேரோடு அழித்த பெருமானுக்கு
பல்லாண்டு மங்களம் பொங்கப்போற்றுவோம்.
*குறிப்பு – புழுதி மண் : திருநாளைத் துவக்க பொடி மண் கொண்டு வருதல்.
4.
தன்னைத்தான் அனுபவிக்கும் நிலையை விட்டு
எங்கள் கூட்டத்தில் சேர
உங்களுக்கு விருப்பமா?
எனில்
நீங்களே உங்களுக்கு  விதித்துக்கொண் ட  வரம்புகளை உடைத்து
உங்கள் உடல் மண்ணில் விழும் முன்னால்
விரைவில் எங்களோடு சேருங்கள்
சேர்ந்தபின் னால்…….
நாடும் நகரமும்
உங்கள் நன்மையை அறிந்து கொள்ள
“நமோ நாராயணாய” எனப்பாடும்
பக்தர்களோடு சேர்ந்து
நீங்களும்
எம்பெருமானுக்குப்பல்லாண்டு பாடுங்கள்.
5.
அண்டங்களுக்கெல்லாம்  அதிபதி
அசுரர் அரக்கரின் நெருங்கிய கூட்டத்தை
நிர்மூலமாக்கிய ரிஷிகேசன்
அவனது அடியார்கள் கூட்டத்தவரே !
நீங்கள்
பயன் கருதும் பழைய தன்மையை நீக்குங்கள்
எங்களோடு இணைந்து
இறைவன் திருவடிகளை வணங்குங்கள்
அவனது
ஆயிரம் திருநாமங்களைச் சொல்லுங்கள்
எப்பொழுதும்
பல்லாண்டு பாடுங்கள்.
6.
என் தகப்பன்
என் தகப்பனின் தகப்பன்
அவனது தகப்பன்
அவருக்குத் தகப்பன்
அவருடைய பாட்டன்
என
ஏழு தலைமுறைகளா ய்
உரிய காலங்களில்
முறை தவறாமல் தொண்டு புரிகிறோம்
திருவோணத்திருநாளிலே
அழகான  மாலை வேளையிலே
நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றி
பகைவன் இரண்யனைக் கொன்றொழித்த பெருமானுக்கு
அன்றையக் களைப்பு  நீங்கப்
பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு பாடுவோம்.
7.
தீயைக்காட்டிலும் பிரகாசிக்கும்
செக்கச்சிவந்த ஒளி  உமிழும்
சக்கரத்தாழ்வானை
தோளில் முத்திரை குத்தி
குடும்பமாய்  இறைப்பணி செய்கின்றோம்
வஞ்சனையால் போர் புரியும்
படை கொண்ட பாணாசுரனின்
ஆயிரம் தோள்களிலிருந்தும்
இரத்தம் வெள்ளமாகப்பாயும் படி
சக்கரத்தைச் சுழல விட்ட
எம்பெருமானுக்குப்
பல்லாண்டு பாடுவோம் .
8.
பெருமானே!
நல்ல நெய்   சோறும்
எப்போதும் பிரிவின்றி
நெருங்கிச் செய்கின்ற  பணியும்
வெற்றிலைப்பாக்கும்
நீ கொடுத்தாய்.
கழுத்திலும் காதிலும் அணிய நகைகளும்
உடம்பில் பூச சந்தனமும் தந்தாய்
பிறவியில் உழன்ற எனக்கு
ஞானம் அருளினாய்
படத்தை உடைய நாகத்துக்குப் பகை கருடன்
அந்தக்கருடனைக் கொடியில் கொண்டவனே
உனக்குப் பல்லாண்டு பாடுகிறேன்.
9.
எம்பெருமானே!
நீங்கள்
உடுத்திக்களைந்த பொன்னாடையை உடுத்தி
நீங்கள்
உணவருந்தியபின் மீதியை உண்டு
நீங்கள்
சூடிக்களைந்த துளசி மாலைகளை அணிகின்ற
தொண்டர்கள் நாங்கள்
அத்தோடு நிற்பதில்லை நாங்கள்
தங்களுக்கு
எத்திசையில் எக்காரியமானாலும்
அதை ஒழுங்குறச் செய்து முடிக்கின்றோம்
இருந்தும்
திருப்தியில்லை எங்களுக்கு
நீங்கள் பாம்பணையில் பள்ளி கொண்ட அழகுக்கு
ஒரு குறைவும் இல்லாமலிருக்க
திருவோணத்திருநாளிலே
பல்லாண்டு பாடுவமே!
10.
எம்பெருமானே!
“உங்களுக்கு அடிமைப்பட்டவர்கள் நாங்கள்” என்று சொன்ன
அதே நாளிலேயே
நாங்கள்
நற்கதி பெற்று விடுதலை  அடைந்தோம்
ஒரு நல்ல நாளிலே அவதரித்து
வடமதுரையிலே
கம்சனின் ஆயுதக்கிடங்கிலே புகுந்து
வில்லை வளைத்து முறி த்தவனே!
படமெடுத்த ஐந்துதலை நாகத்தின்
தலைதனில் குதித்தவனே!
உனக்குப் பல்லாண்டு பாடுவமே!
11.
திருமாலே!
அநீதிகள் எதுவும் நடக்காத
திருக்கோட்டியூர் மக்களுக்குத் தலைவர்
உனக்கு அடியவர் என்ற நன்மதிப்பும் பெற்றவர்
செல்வநம்பி
அவரைப்போல
நானும் உனக்குப்பழமையான அடியவன்
தூயவனே!
நல்வழியில் நன்மை பெற
“நமோ நாராயணா” எனக்கூறி
உனது பல திருநாமங்களையும் சொல்லி
உனக்குப்பல்லாண்டு பாடுவேன்.
12.
என்றுமே தூயவன்
பரமபத வாசன்
சாரங்கவில்லை உடையவன்
இந்த பெருமானை
ஸ்ரீவில்லிபுத்தூரிலே பிறந்த விஷ்ணுசித்தன்
பரிவுடன் பாடிய
இத்திருப்பல்லாண்டை
நமக்கு
நல்ல காலம் பிறந்ததென்று
மகிழ்ச்சியுடன் சொல்பவர்கள்
“நமோ நாராயணா” என
எப்போதும்
பரமாத்மனை சூழ்ந்திருந்து
பல்லாண்டு பாடுவரே.
Advertisements
This entry was posted in Thiruppallandu and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s