விண்மீன் வெள்ளி எத்திசையில் இருந்தாலென்ன?

384. விண்மீன் வெள்ளி எத்திசையில் இருந்தாலென்ன?
பாடியவர் : புறத்திணை நன்னாகனார்
பாடப்பட்டவர் : கரும்பனூர்க்கிழான்
திணை:பாடாண் : திணை
துறை :கடைநிலை (அரண்மனை வாசலில் பாடுதல்)
—–
நீர்வளமிகுந்த மருதநில வயலிலே
நாரை தன் கூட்டத்துடன் மேய்ந்து
பின்
முற்றிய கரும்பின் பூவை உண்ணவேண்டி
வஞ்சி மரக்கிளையிலே தங்கும்
காடு சார்ந்த முல்லை நிலத்திலே
வரகு விளையும்
அதை அறுவடை செய்த களத்திலே எலிகள் வாழும்
எலிகளைப்பிடிப்பதற்கு ஓடும்
சிறு காடையின் ஆரவாரம்
அந்த சத்தத்தால்
அங்கே வசிக்கின்ற குறுமுயல் அஞ்சிஓடும்
அருகிலுள்ள இலுப்பை மரத்தின் பூக்கள் உதிரும்
விழா ஒன்றும் இல்லைதான்
ஆனாலும்
உழவர்களின் உணவுப்பா த்திரங்களிலே
பெரிய கெளுத்திமீன் உணவுடன்
இஞ்சிப்பூ தூவிய கள் நிறைந்திருக்கும்
இத்தகைய ஊரின் தலைவனான கம்பனூர்க்கிழானின்
இரவலர் நாங்கள்
பெருமானே !
நெல்லாலும் பொன்னாலும் பயன் என்ன?
குடித்தவுடன் உடலில் சூடு பரவும் கள்ளினால் என்ன பயன்?
என் வீட்டில் இல்லாத பலவும்
எனக்குக் குறைவின்றிக் கொடுப்பான்
இறைச்சி கலந்த சுவையான சோற்றிலே
நெய்யை நீர் போல் பெய்து
மற்றவர் நாணும்படி வழங்கும்
புகழுடையோன்
என்னை ஆதரிப்பான்
எங்கள் தலைவன்
இதனால்
நாங்கள் வறுமை குறித்து வருந்துவதில்லை
இவன் எங்கள் தலைவனானதால்
விண்மீன் வெள்ளி எத்திசையில் நின்றால் எங்களுக்கென்ன?
அவன் பேராதரவால்
உண்டு தின்றோம்
உண்டபின் மீதியை எறிந்தோம்
பல்லில் சிக்கிய இறைச்சியை நீக்கினோம்
இப்படிக்கழிந்தன நாட்கள்
உண்டு களித்த நாட்கள் எத்தனை?
நாம் அறியோம்.

இதன் மூலத்தை இங்கே காணலாம்

Advertisements
This entry was posted in Purananooru and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s