பழுத்த மரம் நாடி ………

370. “பழுத்த மரம் நாடி ………”
பாடியவர் : ஊன்பொதி பசுங்குடையார்
பாடப்பட்டவர் : இளஞ்சேட்சென்னி
திணை : வாகை
துறை : மறக்களவழி (அரசனை விவசாயியுடன் ஒப்பிடல்)
—–
வள்ளல் தன்மை கொண்ட பெருமக்களைக்காணோம்
வாழும் வழியை எண்ணி
பனை நாரும் பனங்குருத்தும் எடுத்துக்கொண்டு
உணவேதும் கிடைக்காத நிலையிலே
பசியால் வாடும் என் பெரிய சுற்றத்தா ர்க்கு
உணவு பெற வேண்டிய கட்டாயத்தில்
நாலாத் திசைகளிலும் தேடி
உடம்பெல்லாம் வியர்வை ஒழுக அலைந்து
ஒட்டிய வயிறுடன் வரும் வழியிலே
கோட்டானின் உடுக்கைஒலி போன்ற கடுங்குரல்
வாகை மரத்தின் பொந்திலிருக்கும்
பெட்டைப்பருந்தை அழைக்கின்ற
சேவற்பருந்தின் குரலோடு கலந்து ஒலிக்கும்
அங்கே
காய்ந்த மூங்கில்கள் கிடக்கும்
நீரற்ற நீண்ட வழியிலே
வரிகளையுடைய மரல் பழங்கள் கிடக்கும்
காடுகள் பல கடந்து
பழுத்த மரங்களை நாடும் வௌவால்களைப்போல்
நான் வந்தேன்
வில்லும் வாளுமாகிய படை
வெட்டுண்ட தலைகள்
பெருமழையால் கொட்டும் பழங்களைப்போல் விழும்
அதனால்
நிலத்தில் பரவும் ரத்தவெள்ளம்
முற்றிய கதிர்களைப்போன்ற பகைவர் கழுத்தை அறுத்து
காலோடு குவித்து
பிணக்குவியல்கள் அழியும்படி வளைத்து
யானைகளை எருதாகவும்
வாளினை பனைமட்டையைப் போலவும் செலுத்தி
ஏர்க்களம் போன்ற போர்க்களத்திலே
பெரிய கண்ணைக்கொண்ட பறையை ஒலித்து
உனது பெரிய போர்க்களம் புகழ் பெறுக
எனப் பாராட்டி
இரும்புப்பூண் அணிந்த உயர்ந்த தந்தங்களையுடைய
மலைபோன்ற யானைகளைப்பரிசாக
வேண்டி வந்தேன் பெருமானே!
கோடரி பாய்ந்ததால் வெட்டுப்பட்ட பெரிய கையை எடுத்து
மேலே தூக்கி
வீரர்களின் குடல்கள் தன காலைச்சுற்ற
பேய்மகள் அழுகுரல் எடுத்துப்பாடி ஆட
கழுகுகளும் சிவப்புக்காது பருந்துகளும் வட்டமிடும்
பார்ப்பவர்க்கெல்லாம் பயம் தரும்
போர்க்களத்தின் உரிமையாளனே !

இதன் மூலத்தை இங்கே காணலாம்

Advertisements
This entry was posted in Purananooru and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s