359. நிலைத்து நிற்கும் புகழ்
பாடியவர் : கரவட்டனார்
பாடப்பட்டவர் : அந்துவன் கீரன்
திணை : காஞ்சி
துறை : பெருங்காஞ்சி
—–
எல்லாம் கெட்டுப்போன
முட்கள் நிறைந்த இடம் இந்த சுடுகாடு
கொடிய வாய் கொண்ட கோட்டான்
குரலை உயர்த்தி தாழ்த்தி உருட்டிக் கத்துகிறது
அதனுடன்
பிணங்களைத்தின்னும் குள்ளநரிகள்
அவற்றின் பற்களிலே தசைத்துண்டுகள்
பிணம் தழுவி வெள்ளைத்தசை தின்ற
புலால் நாற்றமடிககும் உடம்போடு
களர் நிலத்தில் சுடுகாட்டு வெளிச்சத்தில்
கூத்தாடும் பேய் மகளிர்
அச்சம் தரும் காட்சி இது
பெரிய நாடுகளை வென்ற
மன்னாதி மன்னரெல்லாம்
இச்சுடுகாட்டிலே அடக்கம்
நீயும் ஒரு நாள் இங்குதான் வரவேண்டும்
பழியும் நிரந்தரம்
புகழும் நிரந்தரம்
ஆதலாலே
பழிக்கு ஆளாகாமல் புகழை நாடுவாய்
நடுநிலைமை கொண்டு நல்லவை பேசு
ஒளிரும் தந்தங்களை உடைய யானைகள்
பொன்னணிகள் அணிந்த குதிரைகள்
பொன்னால் இழைத்த தேர்கள்
இவற்றையெல்லாம்
இரவலர்க்கு வாரி வழங்கு
அப்படி நீ செய்தால்
நீ இறந்த பின்னாலும்
உனது கொடையால் நீ அடைந்த புகழ்
என்றென்றும் நிலைத்திருக்கும்.
இதன் மூலத்தை இங்கே காணலாம்
Advertisements