போரால் ஊர் என்னாகுமோ?

345. போரால் ஊர் என்னாகுமோ?
பாடியவர் :அண்டர் நடுங்கல்லினார்
திணை :காஞ்சி
துறை :மகட்பாற்காஞ்சி

—–

யானையின் பெருமூச்சாய்க்
காற்றை வெளியிடும்
கொல்லன் உலைத்துருத்தி
அதன் வாய் இரும்புபோல்
இரட்டைக் கதவுகள் பொருந்துமிடத்திலே
பாதுகாப்பாய் இருக்கிறாள் இப்பெண்
அவள் ஊரிலே
அவளை மணமுடிக்க
போரையே இயல்பாய்க் கொண்ட வீரர்கள் வந்து தங்குகிறார்
அவர்கள் யானையைக் கட்டுவதால்
அவை திமிரும்போது
சோலை மரங்கள் நிலை கலங்கின
தேர்கள் ஓடுவதால் தெருக்களில் புழுதிப்படலம்
குதிரைகள் திரிவதால் வழிகள் மறைந்தன
போர்க்கருவிகளைக் கழுவுவதால்
நீர்நிலைகள் குழம்பின
படைகொண்டு புதிது புதிதாய்
வேந்தர் பலர் வந்தனர்
அவர்கள் பாரம் தாளாது பூமி நடுங்குகிறது
கரிய கண்களோடு
தாபத்தைத் தரும் நெருங்கிய மார்பகங்கள் அவளுக்கு
காண்போர் மயங்கும் பார்வையும் கொண்டவள்
இவளை அடைய விரும்பினோர் பரிதாபத்துக்குரியவர்
இவளது அண்ணன்மாரோ
எவ்வளவுதான் செல்வம் கொடுத்தாலும்
தம் தகுதிக்கு ஈடில்லாதவர்க்கு
பெண் கொடுக்க மாட்டாராம்
அவர்களை
போருக்கு அழைப்பதையே விரும்புகிறார்
கேடயமும் வாளும் ஏந்தியவர்
ரத்தவாடை வீசும்
கழுவாத தலை அவர்களுடையது
உறுதியான காம்பு கொண்ட
நீண்ட வேல் ஏந்தும் வீரர்கள் தான்
ஆனாலும்
அய்யோ !
பருத்தி வேலி சூழ்ந்த
வளமிக்க வயல்கள் நிறைந்த இந்த ஊர்
மூளவிருக்கும் போரால்
என்ன ஆகுமோ?
தெரியவில்லை.

இதன் மூலத்தை இங்கே காணலாம்

Advertisements
This entry was posted in Purananooru and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s