அறப்பண்பில்லாத அன்னை

336. அறப்பண்பில்லாத அன்னை
பாடியவர் : பரணர்
திணை : காஞ்சி (பகைவன் போருக்கு வர காஞ்சிப்பூச் சூடி தன்னிடத்தைக் காத்தல்)
துறை : : மகட்பாற்காஞ்சி (பெண்கேட்கும் தலைவனோடு மாறுபடல்)

—–

பெண்கேட்ட வேந்தனோ பெருங்கோபக்காரன்
பெண்ணின் தந்தையோ பெண் தரமறுக்கிறான்
முகத்திலே உயர்ந்துள்ள தந்தங்களையுடை ய யானைகள்
காவல் மரத்தில் கட்டப்படவில்லை
வேந்தனின் வீரரும்
தந்தையின் வீரரும்
எதுவும் பேசாமல் வாய் மூடி நின்றனர்
அய்யோ !
கோபமுற்ற வேந்தன் போர்ப்பறை முழக்குகின்றான்
காவல் மிகுந்த பழைய ஊரோ கதிகலங்கிக் கிடக்கிறது
வேங்கை மலையிலே
பூவிரிந்த கோங்க மர அரும்பைப்போல்
அழகான இளம் மார்பகங்களை உடைய மகள்
அவளுடைய தாய்க்கோ
மகளை அழகு மிக்கவளாய் வளர்த்தெடுத்த மகிழ்ச்சி
போரைத்தடுக்க வழி கூறாமல்
தாயும் தன கணவன் வழி சென்று
அறப்பண்பற்றவளாகி விட்டாள்.

இதன் மூலத்தை இங்கே காணலாம்

Advertisements
This entry was posted in Purananooru and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s