முதியவளின் பெருமகிழ்ச்சி

278. முதியவளின் பெருமகிழ்ச்சி
பாடியவர்: காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்
திணை: தும்பை (தும்பைப்பூச்சூடி போரிடல்)
துறை: உவகைக் கலுழ்ச்சி. (விழுப்புண் பட்ட மகன் இறந்தது கண்டு மகிழ்தல்)
————
முதியவள் அவள்-
நரம்புகள் தெரிகின்ற வற்றிய மெல்லிய தோள்கள்
தாமரையிலை போன்ற அடிவயிறு
அறியாத பலர் அவளிடம் சொல்கிறார்கள்-
உன்மகன் போரிலே பகைவருக்குப் பயந்து புறமுதுகிட்டு மாண்டான் என்று.
அவள் சினந்து சொல்கிறாள்-
என் மகன் போர் கண்டு அஞ்சி மாண்டது உண்மையென்றால்
அவன் வாய் வைத்து உண்ட என் மார்பகத்தை
வாளால் அறுத்தெறிவேன் எனக்கூறி
குருதி படிந்து சிவந்த போர்க்களம்
சிதறிக்கிடக்கும் வீரர்களின் பிணங்கள்
பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்க்கிறாள்
அங்கே-
மார்பில் விழுப்புண் பட்டுச் சிதைந்து சின்னா பின்னமான
தன் மகன் உடலைக் கண்டு
அவனைப் பெற்ற வேளையில் கொண்ட உவகையினும்
பெருமகிழ்ச்சி அடைகிறாள்.

இதன் மூலத்தை இங்கே காணலாம்

Advertisements
This entry was posted in Purananooru and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s