நான் ஒரு பெண்?

நான் ஒரு பெண்?

Sojourner Truth, half-length portrait; hotogra...

Sojourner Truth (Photo credit: Wikipedia)

 

அதோ அந்த மனிதன் சொல்கிறான்

வண்டியில் ஏறவும்

பள்ளத்தைத் தாண்டவும்

ஒரு பெண்ணுக்கு உதவி செய்

எங்கிருந்தாலும் அவளை சிறந்த இடத்தில் வை என்று

ஆனால் வண்டியில் ஏறவோ

பள்ளத்தைத் தாண்டவோ

எவரும் இதுவரை உதவியதில்லை

சிறந்த இடமும் தந்தாரில்லை

நான் ஒரு பெண்?

என்னைப் பாருங்கள்

என் கையைப் பாருங்கள்

நான் உழுதிருக்கிறேன்

விதைத்திருக்கிறேன்

அறுவடை செய்து குவித்திருக்கிறேன்

பண்ணை வேலைகளில் ஆணுக்கு நிகர் நான்.

நான் ஒரு பெண்?

என்னால் ஒரு ஆணைப்போலவே

உழைக்கவும் முடியும்

உண்ணவும் முடியும்

சாட்டையடியை தாங்கவும் முடியும்.

நான் ஒரு பெண்?

பதின்மூன்று குழந்தைகள் பெற்றேன்

அத்தனை குழந்தைகளும் அடிமைகளாய் விற்கப் படுகையில்

ஒரு தாயாய் நான் கதறிய துயர்க்குரல்கள்

கிறிஸ்துவைத் தவிர எவர் காதிலும் ஏறவில்லை

நான் ஒரு பெண்?

கறுப்பு அங்கியணிந்திருக்கும்

அந்த மனிதன் சொல்கிறான்

ஒரு பெண் ஒரு ஆணுக்கு நிகரான

உரிமைகளைப் பெறக்கூடாது என்று.

ஏன் என்று கேட்டால்

கிறிஸ்து ஒரு பெண் இல்லை என்கிறான்.

எங்கிருந்து இந்த கிறிஸ்து தோன்றினார்?

அவர்

ஆணின் குறுக்கீடின்றி அவதரித்த

கடவுளின் குழந்தை

உலகில் படைக்கப்பட்ட

முதல் பெண் தெய்வம் “ ஏவாள் “

தனி ஒருத்தியாய்

உலகத்தை தலை கீழாக்கினாள்

பெண்கள் நாங்கள் ஒன்று கூடி

நேராக்குவோம் அந்த உலகத்தை

மீண்டும்.

This is a Tamil Translation of “Ain’t I a Woman?” by Sojourner Truth.

தமிழில்: எம்.கார்த்திகேயன். Translated in Tamil By M. Karthikayen

Ain’t I a Woman?” is the name given to a speech, delivered extemporaneously, by Sojourner Truth, (1797–1883), born into slavery in New York State. (Text Wikipedia)

தமிழில்: எம்.கார்த்திகேயன். Translated in Tamil By M. Karthikayen

Image | This entry was posted in Other Translations and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s