தாய்

எனது தாய் வளமை மிகு கரிய பூமி

பசிய இலைகளும் வெள்ளை மலர்களின் விழாக் கோலமும்;

ஒவ்வொரு சிற்றோடையிலும் பூமியின் பொலிவு தோன்றும்

ஒவ்வொரு வேதனையிலும் மேலும் மலர்கள் மேலும் கனிகள்;

குழந்தைகளின் உதைப்பில் அவளின் கால்கள் சிலிர்க்கும்.

தலையில் சுமந்த கூடையிறக்கி,

மெல்ல முனகி

இனி என்றுமே திறக்க எண்ணாமல்

கண்களை மூடினாள்.

 

என் தந்தையை மகிழ்வித்து

தன் கைகளுக்கு காப்பணிய

பூமிக்கு நீர் பாய்ச்சி

தினை பல பயிர் செய்தாள்

மிளகும் பயிரும் தினையும் விதைத்தாள்.

பூக்களுடன் மலர்ந்து பழங்களுடன் கனிந்தாள்.

பயிர் வளரும் வயல் காத்து

கந்தல் துணிகளில் அவள் இளமை கழித்தாள்.

அவள் இறந்து போனாள்;

 

இந்த கூனல் கிழவியின் இளமை என்ன பிறை நிலாக்கள்,எத்தனை?

அடுப்புக்கு  முன்னால் இனிப்புகள் செய்து கழித்த விழாக்கள் எத்தனை?

பணம், இறந்து போன கன்று, அழிந்து போன தானியம்,

இவற்றுக் கெல்லாம் இந்த வயதானவள்

அழுத நாட்கள் எத்தனை?

தொலைந்து போன கிழட்டு எருமை தேடி கிராமாந்திரங்களில்

அவள் அலைந்த நாட்கள் எத்தனை?

 

இவள்

சாவித்திரியோ

ஜானகியோ

அல்லது

ஊர்மிளையோ அல்ல!

அமைதியும்

அழகும்

மதிப்பும்  மிகுந்த

வரலாற்றுக் கதாநாயகியுமல்ல!

காந்தி,

ராமகிருஷ்ணரின்

மனைவியரைப் போல

பணிவு மிக்கவளும் அல்ல.

 

அவள்

தெய்வங்களை தொழவுமில்லை

புராணக்கதைகளைக் கேட்கவுமில்லை

ஒரு நல்ல மனைவியின் நெற்றியில் துலங்கும்

குங்குமமும் அணியவில்லை.

 

முரட்டு கரடியைப் போல்

அவள் குழந்தைகளை சுமந்து

கணவனைக் காத்து

துணி முடிச்சுக்களில் காசுகளைச் சேர்த்தாள்.

அடி பட்ட நாயாய்

உறுமி

முனகி

சண்டையிட்டாள்.

குறுகிய நோக்கம்

தந்திரம்

குரங்கின் பிறாண்டல்-

எப்படியோ

குடும்பத்துக் குதவுதலே

அவளின் ஒரே நோக்கம்.

மகனும் கணவனும்

ஒழுங்கு மீறுகையில்

அவள் காட்டுத் தீயாய் சீறி எழுவாள்

ஒரு காட்டுக் கரடிக்கு எதற்கு உங்கள் பகவத் கீதை?

விறகு, தானியம், உழைப்பு, குழந்தைகள்;

தலைக்கு மேல் ஒரு கூரை

அரிசி,ரொட்டி, ஒரு போர்வை

அவளது தரத்தினரிடையே

நெஞ்சு நிமிர்த்தி நடத்தல்

இவற்றுக்காகத்தான்

என் தாய் வாழ்ந்தாள்.

 

நம்மைச் சுமந்தாள்,வளர்த்தாள்

இம் மண்ணின் ஒரு கூறாய் வாழ்ந்தாள்

பரபரப்பே இல்லாமல்

பேச்சுக்களினூடே

வீட்டை விட்டு வயலுக்குப் போவது போல்

போய்விட்டாள்.

என் நன்றிப் பெருக்கின் கண்ணீரே

அவளுக்கு என் அஞ்சலி.

 

கன்னட மூலம்: P.லங்கேஷ்,  ஆங்கிலத்தில்: ஏ.கே.ராமானுஜன் மற்றும் எம்.வி.ரிடி.

தமிழில்:எம்.கார்த்திகேயன்

See the Kannada and English version here

 

Advertisements
This entry was posted in Translated poems and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s